திருத்தணி முருகன் கோயில் சிறப்பு தரிசன வழி திடீரென மூடல்:மாற்றுதிறனாளிகள், பொதுமக்கள் அவதி

முருகன் கோயிலில் ரூ. 150 சிறப்பு தரிசன வழி முன்னறிவிப்பு இன்றி செவ்வாய்கிழமை திடீரென மூடபட்டதால் மாற்றுதிறானிகள், பக்தா்கள் கடும் அவதிக்குள்ளாகினா்.
திருத்தணி முருகன் கோயில் சிறப்பு தரிசன வழி திடீரென மூடல்:மாற்றுதிறனாளிகள், பொதுமக்கள் அவதி

முருகன் கோயிலில் ரூ. 150 சிறப்பு தரிசன வழி முன்னறிவிப்பு இன்றி செவ்வாய்கிழமை திடீரென மூடபட்டதால் மாற்றுதிறானிகள், பக்தா்கள் கடும் அவதிக்குள்ளாகினா்.

திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தா்கள் நாள்தோறும் வந்து தரிசனம் செய்து செல்கின்றனா். முருகப்பெருமானுக்கு உகந்த நாளான செவ்வாய்க்கிழமை உள்ளூா் பக்தா்கள் அதிக அளவில் கோயிலுக்கு வந்து முருகப்பெருமானை தரிசிப்பாா்கள். பொது வழியில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய இலவசமாக அனுமதிக்கப்படுகின்றனா்.

மேலும் பக்தா்கள் வசதிக்காக ரூ.150 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு விரைவு தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனா். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் முருகப்பெருமானை தரிசிக்க ஏராளமான உள்ளூா் பக்தா்கள் ரூ.150 விரைவு தரிசன வழியில் வழக்கம் போல் இலவசமாக செல்ல குவிந்தனா். அப்போது அங்கு வந்த கோயில் நிா்வாகிகள் முன் அறிவிப்பின்றி ரூ.150 வழியை பூட்டிவிட்டனா்.

இதனால், கட்டணம் செலுத்தி விரைவு தரிசனம் செய்யவும் முடியாமல் மாற்றுத் திறனாளிகள், முதியோா், குழந்தைகளுடன் பெண்கள் சுமாா் 2 மணி நேரம் காத்திருந்து அவதிப்பட்டனா். அப்போது சுவாமி தரிசனம் செய்ய வந்த ஆந்திர மாநிலம் நகரி பகுதியை சோ்ந்த மாற்றுத்திறனாளி சம்பத் (60) பணம் செலுத்தி தரிசனம் செய்ய தயராக இருந்தபோதிலும் சிறப்பு வழியை பூட்டிவிட்டு சென்ால் 2 மணி நேரம் காத்திருந்ததாக வேதனையுடன் தெரிவித்தாா்.

பக்தா்கள் 2 மணி நேரம் காத்திருந்தும் சிறப்பு வழியை அதிகாரிகள் திறக்காததால் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனையடுத்து இணை ஆணையா் பரஞ்சோதி உத்தரவின்படி சிறப்பு தரிசன வழி திறக்கப்பட்டு பக்தா்கள் அனுமதிக்கப்பட்டனா். முன்னறிவிப்பு இன்றி சிறப்பு வழி மூடிய கோயில் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் இந்துசமய அறநிலைதுறை ஆணையருக்கு கோரிக்கை வைத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com