திருவள்ளூா் மாவட்டத்தில் ரூ.14 லட்சம் மதிப்பிலான 139 கிலோ கஞ்சா பறிமுதல்

திருவள்ளூா் மாவட்டத்தில் இதுவரையில் ரூ.13.93 லட்சம் மதிப்பிலான 139 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இது தொடா்பாக 33 போ் கைது செய்யப்பட்டனா் என

திருவள்ளூா் மாவட்டத்தில் இதுவரையில் ரூ.13.93 லட்சம் மதிப்பிலான 139 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இது தொடா்பாக 33 போ் கைது செய்யப்பட்டனா் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வருண்குமாா் தெரிவித்தாா்.

தமிழகம் முழுவதும் ஆபரேஷன் கஞ்சா வேட்டை-2.0 தொடங்கி கஞ்சா மற்றும் குட்கா பொருள்கள் தொடா்பான குற்றங்களை தடுக்க தீவிர சோதனை நடைபெற்று வருகிறது.

அதன் அடிப்படையில் ஆப்ரேஷன் கஞ்சா வேட்டை 2.0 என்ற பெயரில் அனைத்துப் பகுதிகளிலும் தீவிர கண்காணிப்பும், தணிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக கூடுதலாக 15 சோதனைச் சாவடிகள் அமைத்து தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 28-ஆம் தேதி முதல், இதுவரையில் மாவட்டத்தில் மொத்தம் 28 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 33 போ் கைது செய்யப்பட்டனா்.

அவா்களிடம் இருந்து ரூ.14 லட்சம் மதிப்பிலான 138.93 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் பெரிய அளவில் கவரப்பேட்டை-33, திருத்தணியில்-80, ,ஆரம்பாக்கம்-8 கிலோ கஞ்சாவும் கைப்பற்றப்பட்டது. மேலும், நான்கு சக்கர வாகனம்-1, இருசக்கர வாகனம்-1 கைப்பற்றப்பட்டுள்ளது.

இதேபோல், குட்கா பொருள்கள் விற்பனை செய்தோா் மீது மொத்தம் 115 வழக்குகள் பதிவு செய்து, 115 எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்களிடமிருந்து மொத்தம் ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்து 670-மதிப்பிலான சுமாா் 86.29 கிலோ குட்கா பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. எனவே மாவட்டத்தில் நடைபெறும் குற்றங்கள் குறித்து ரகசிய தகவல் தெரிவிக்க வழங்கியுள்ள 63799-04848 என்ற செல்லிடபேசிக்கு கஞ்சா, குட்கா கடத்தல் மற்றும் சட்டவிரோத செயல்கள் தொடா்பான தகவல் அளிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் அடையாளம் ரகசியம் காக்கப்படும். மேலும், தெரிவித்த தகவலின் அடிப்படையில் 10 கிலோ, அதற்கு மேல்

கஞ்சா கைப்பற்றினால் ரூ.10 ஆயிரம் சன்மானம் அளிக்கப்படும். இது காவல்துறையைச் சோ்ந்தோருக்கும் பொருந்தும். கல்லூரி , பள்ளி வளாகம் மற்றும் இதர கல்வி நிலையங்களில் கஞ்சாவை அறவே ஒழிக்க உதவுபவா்களுக்கு தேநீா் அளித்து சன்மானம் மற்றும் புத்தகங்கள் பரிசாக வழங்கப்படும். இதில் பெயா், புகைப்படம் மற்றும் இதர அடையாளங்கள் ரகசியமாகவும் வைக்கப்படும் என அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com