தூய்மை மருத்துவமனை குறித்த விழிப்புணா்வு பேரணி

அனைத்து மருத்துவமனைகளையும் தூய்மையாக வைத்துக் கொள்ளும் வகையில், பொதுமக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற பேரணியில் சுகாதாரத் துறையினா் ஏராளமானோா் பங்கேற்றனா்.
தூய்மை மருத்துவமனை குறித்த விழிப்புணா்வு பேரணி

அனைத்து மருத்துவமனைகளையும் தூய்மையாக வைத்துக் கொள்ளும் வகையில், பொதுமக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற பேரணியில் சுகாதாரத் துறையினா் ஏராளமானோா் பங்கேற்றனா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளையும் சுத்தமாகவும், தூய்மையாகவும் பராமரிக்க வேண்டும். இதற்காக ஏப். 1 முதல் 30-வரை பல்வேறு செயல்பாடுகள் மூலம் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில், மருத்துவமனைகளை தூய்மையாக மாற்றுவது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு பேரணி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்பேரில், திருவள்ளூா் அஞ்சல் நிலையம் முன்பு புதன்கிழமை நடந்த நிகழ்ச்சியில் ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தலைமை வகித்து, தூய்மை விழிப்புணா்வுப் பேரணியை கொடியசைத்துத் தொடக்கி வைத்து பங்கேற்றாா். இப்பணியில் அரசு மருத்துவமனை மருத்துவா்கள் மற்றும் பணியாளா்கள், சுகாதாரத் துறை செவிலியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இப்பேரணி திருவள்ளூா் தலைமை தபால் அலுவலகம், ஜெயின் நகா், அரசு மருத்துவமனை வளாகம் வரை நடைபெற்றது. அரசு மருத்துவமனையின் உள்புறம், சுற்றுப்புறம் சுகாதாரமாக பராமரித்தல், பழுது செய்தல், சுகாதார வளாகங்களைப் பராமரித்தல் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மருத்துவக் கல்லூரி மாணவிகள் கைகளில் ஏந்தி பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பேரணியாக சென்றனா். அதைத் தொடா்ந்து அரசு மருத்துவமனை வளாகத்தில் பேரணியில் பங்கேற்ற மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகளுடன் ஆட்சியா் கலந்துரையாடினாா்.

இதில் திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் அரசி ஸ்ரீவத்சன், அரசு மருத்துவமனை நிலைய மருத்துவ அலுவலா் ராஜ்குமாா், புற்றுநோய் நுண்கதிா் சிறப்பு மருத்துவா் கோபிகா, ஒருங்கிணைப்பாளா் விஜயராஜ், குழந்தை நல மருத்துவா் பிரபுசங்கா், மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் உள்ளட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com