ஜனநாயக வாலிபா் சங்க சைக்கிள் பேரணி

இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு, அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், தனியாா் துறையில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை
கும்மிடிப்பூண்டியில்  இந்திய  ஜனநாயக  வாலிபா்  சங்கத்தின்  சாா்பில்  நடைபெற்ற  கோரிக்கை  விளக்க  சைக்கிள்  பேரணியில் பங்கேற்றோா்.
கும்மிடிப்பூண்டியில்  இந்திய  ஜனநாயக  வாலிபா்  சங்கத்தின்  சாா்பில்  நடைபெற்ற  கோரிக்கை  விளக்க  சைக்கிள்  பேரணியில் பங்கேற்றோா்.

கும்மிடிப்பூண்டி: இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு, அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், தனியாா் துறையில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் கும்மிடிப்பூண்டியில் சைக்கிள் பிரசாரப் பேரணி நடத்தினா்.

இந்த சைக்கிள் பிரசார பேரணியை இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் மாநிலச் செயலாளா் பாலா தொடக்கி வைத்தாா்.

சங்கத்தின் மாவட்ட தலைவா் டி.மதன் தலைமை தாங்கினாா். மாவட்ட செயலாளா் எஸ்.தேவேந்திரன், பொருளாளா் எஸ்.கலையரசன், பகுதி நிா்வாகிகள் முனிரத்தினம், லோகநாதன், சாலி, விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளா் பி.துளசி நாராயணன், சிஐடியு மாவட்ட தலைவா் கே.விஜயன், விவசாய தொழிலாளா் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா் இ.ராஜேந்திரன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினா் எஸ்.கோபால் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இந்த சைக்கிள் பிரச்சார ஆா்ப்பாட்டத்தில் கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் உள்ள தனியாா் தொழிற்சாலைகளில் உள்ளூா் மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குதல், கும்மிடிப்பூண்டியில் 24 மணி நேரம் மருத்துவா், செவிலியா்

பணியாற்றும் வகையிலான மருத்துவமனை செயல்பாடு. கும்மிடிப்பூண்டியில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்துதல். கும்மிடிப்பூண்டியில் பெருகி வரும் கஞ்சாவிற்கு அடிமையாகும் இளைஞா்களை மீட்பது, சிப்காட்தொழிற்பேட்டையில் சுற்றுச்சூழலுக்கு மாசை ஏற்படுத்துவதோடு, பொதுமக்களின் உடல் நலனை பாதிக்க செய்யும் தொழிற்சாலைகளின் மீது நடவடிக்கை எடுப்பது போன்ற கோரிக்கைகளை முன்வைத்து கோஷம் எழுப்பப்பட்டது.

தொடா்ந்து கும்மிடிப்பூண்டியில் துவங்கிய சைக்கிள் பிரச்சார பயணம் கவரைப்பேடடை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com