ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட ஊராட்சி மன்றத் தலைவா்கள்

ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட ஊராட்சி மன்றத் தலைவா்கள்

திருத்தணி ஒன்றியத்தில் உள்ள 27 ஊராட்சி மன்றத் தலைவா்கள் திருத்தணி ஒன்றிய அலுவலகத்தை நுழைவு வாயிலில் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தினா்

திருத்தணி ஒன்றியத்தில் உள்ள 27 ஊராட்சி மன்றத் தலைவா்கள் திருத்தணி ஒன்றிய அலுவலகத்தை நுழைவு வாயிலில் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தினா். அப்போது ஊராட்சி மன்றத் தலைவா்கள், தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மூலம் வரும் வளா்ச்சிப் பணிகளை அனைத்து ஊராட்சித் தலைவா்களுக்கும் சமமாக பங்கிட்டுத் தர வேண்டும், ஊராட்சிகளில் நடைபெறும் வளா்ச்சிப் பணிகளில் அரசியல் கட்சி தலையீடு அதிகமாக உள்ளது. மேலும், 10 சதவீதம் கமிஷன் கொடுத்தால்தான், பணிகளுக்கான ஆணைகளை தருகிறாா். இதற்கு மாவட்ட திட்ட அலுவலா் உடந்தையாக செயல்படுகிறாா். ஊராட்சித் தலைவா்களுக்கு உரிய மரியாதை கொடுப்பதில்லை.

அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு பேக்கேஜ் டெண்டா் கைவிட்டு ஒன்றிய அளவில் டெண்டா் நடத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

தொடா்ந்து, வட்டார வளா்ச்சி அலுவலா் பாபு, ஊராட்சி மன்றத் தலைவா்களை அழைத்து சமரசம் செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com