தச்சூர் முதல் சித்தூர் வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை: விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தச்சூர் முதல் சித்தூர் வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை: விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தச்சூர் முதல் சித்தூர் வரையில் செல்லும் தேசிய நெடுஞ்சாலைக்கு முப்போகம் விளையும் நிலத்தை அளிக்காமல்

திருவள்ளூர்: தச்சூர் முதல் சித்தூர் வரையில் செல்லும் தேசிய நெடுஞ்சாலைக்கு முப்போகம் விளையும் நிலத்தை அளிக்காமல், மாற்றுப்பாதையில் அமைக்கக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங்கத்தின் மாவட்ட தலைவர் மற்றும் முன்னாள் ஒன்றிய செயலாளர் கோ.சம்பத் தலைமை வகித்தார். ஊத்துக்கோட்டை வட்டாரக்குழு குணசேகரன், ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச்செயலாளர் பி.சண்முகம், மாநில பொருளாளர் கே.பி.பெருமாள் ஆகியோர் ஆர்ப்பாட்டம் குறித்து விளக்கமாக எடுத்துரைத்து தொடங்கி வைத்தனர்.

இதில் விவசாயிகள் ஒப்புதல் இன்றி அளவீடு செய்து எல்லைக்கல் நடக்கூடாது. காவல்துறையை வைத்து விவசாயிகளை அச்சுறுத்தக் கூடாது, விவசாயிகளை அநாகரிகமாக பேசுகின்ற அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், நூற்றுக்கணக்கான ஏக்கர் ஏரி நீர் நிலைகளை அழிக்காமல், திட்டத்தை மாற்று வழியில் செயல்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 500-க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட  துணைச் செயலாளர் நாராயணன், நிர்வாகிகள் மாரிமுத்து வாசுதேவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com