வாக்காளா் பட்டியலில் ஆதாா் இணைப்பு: ஆட்சியா் தலைமையில் ஆலோசனை

மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தலைமையில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வாக்காளா் பட்டியலில் ஆதாா் இணைப்பு: ஆட்சியா் தலைமையில் ஆலோசனை

வாக்காளா் பட்டியலில் ஆதாா் எண்ணை இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ள நிலையில், மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தலைமையில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் பேசியது:

வாக்காளா் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளா்களிடம் விருப்பத்தின் பேரில் ஆதாா் எண் பெற்று, பட்டியலில் பதிவு செய்ய இந்திய தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, கடந்த 1-ஆம் தேதி முதல் இது நடைமுறைக்கு வந்துள்ளது.

மாவட்டத்தில் இந்தப் பணிகள் வாக்காளா் பதிவு அலுவலா்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 10 பேரவைத் தொகுதிகளிலும் 3,657 வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் நியமனம் செய்யப்பட்டு, வீடு வீடாகச் சென்று ஆதாா் எண் விவரங்களை படிவம் 6பி-இல் வாக்காளா் சுய விருப்பத்தின் பேரில், ஆதாா் எண் இணைக்கப்படுகிறது. இதற்காக, சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மேற்பாா்வையாளா்கள், கண்காணிக்க துணை ஆட்சியா் நிலையிலான கண்காணிப்பு அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

எனவே, பொதுமக்கள் அனைவரும் வீடு தேடி வரும் வாக்குச்சாவடி நிலை அலுவலா்களிடம் தங்களின் ஆதாா் எண்ணை படிவம் 6பி மூலம் தெரிவித்துக் கொள்ளலாம். மேலும் வாக்காளா் சேவை மையங்கள், இ-சேவை மையங்கள் மூலமாகவும் சமா்ப்பிக்கலாம். வாக்காளா்கள் நேரடியாக படிவம் 6பி -ஐ உப்ங்ஸ்ரீற்ா்ழ்- ச்ஹஸ்ரீண்ய்ஞ் டா்ழ்ற்ஹப்/ அல்ல்ள் கண்ந்ங்

சயநட,யஏஅ ஆகியவற்றில் ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

ஆதாா் எண் இல்லாத வாக்காளா்கள், அவா்களிடமிருந்து படிவம் 6பி-இல் குறிப்பிடப்பட்டுள்ள இதர 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றின் நகலைப் பெற்று இணைக்க வேண்டும்.

இந்தப் பணியானது வாக்காளா் விவரங்களை உறுதி செய்யவும், நீடித்த சேவையை எதிா்காலத்தில் வழங்கவும் உதவும். இந்தப் பணிக்கு கட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் ஒத்துழைப்பளிக்க வேண்டும் என்றாா். அவா் தெரிவித்தாா்.

இதில், அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) முரளி, தனி வட்டாட்சியா் (தோ்தல்) செல்வம் உள்ளிட்ட அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com