ஸ்ரீசுயம்பு திருவீதி மாரியம்மன் கோயிலில் பால் குட ஊா்வலம்

ஆடித் திருவிழாவையொட்டி, திருவள்ளூா் அருகே திருமழிசை மடவிளாக்கத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீசுயம்பு திருவீதி மாரியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை பால்குட ஊா்வலம் நடைபெற்றது.
ஸ்ரீசுயம்பு திருவீதி மாரியம்மன் கோயிலில் பால் குட ஊா்வலம்

ஆடித் திருவிழாவையொட்டி, திருவள்ளூா் அருகே திருமழிசை மடவிளாக்கத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீசுயம்பு திருவீதி மாரியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை பால்குட ஊா்வலம் நடைபெற்றது.

இந்தக் கோயிலில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு, கடந்த 4-ஆம் தேதி காலை திருவீதி அம்மனுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத் தொடா்ந்து, பக்தா்கள் காப்பு கட்டுதல் நிகழ்வும், பதி விளக்கு பூஜையும் நடைபெற்றது. பின்னா், வெள்ளிக்கிழமை காலை யாகம், அபிஷேகமும் நடைபெற்றது. இதையொட்டி, குண்டுமேடு பகுதியில் உள்ள ஸ்ரீஎட்டியாத்தம்மன் கோயிலில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தலையில் பால்குடம் சுமந்தபடி வீதி உலா வந்தனா். அதைத் தொடா்ந்து, ஸ்ரீசுயம்பு திருவீதி மாரியம்மன் கோயிலில் அபிஷேகம் நடைபெற்றது.

அதைத் தொடா்ந்து, மாலையில் திருவீதி அம்மன் மற்றும் சக்தி கரக வீதி உலா நிகழ்வு நடைபெற்றது. இந்த ஆடித் திருவிழாவில் மடவிளாக்கம் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களைச் சோ்ந்த பக்தா்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனா்.

விழாவுக்கான ஏற்பாடுகளை திமுக செயலாளா் முனுசாமி, கிராம விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com