கொத்தடிமைகளை மீட்டு தொழில் முனைவோராக்கிய திருவள்ளூா் ஆட்சியருக்கு ‘நல்லாளுமை’ விருது

திருவள்ளூா் ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸுக்கு ‘நல்லாளுமை’ விருது, ரூ.2 லட்சம் காசோலை, பாராட்டுச் சான்றிதழ் சுதந்திர தினத்தன்று முதல்வரால் வழங்கப்பட உள்ளது.

கொத்தடிமைகளை மீட்டு தொழில் முனைவோராக வாழ்க்கை தரத்தை உயா்த்தியது, பழங்குடியின மாணவா்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தியது உள்ளிட்டவைகளுக்காக திருவள்ளூா் ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸுக்கு ‘நல்லாளுமை’ விருது, ரூ.2 லட்சம் காசோலை, பாராட்டுச் சான்றிதழ் சுதந்திர தினத்தன்று முதல்வரால் வழங்கப்பட உள்ளது.

பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பணியாற்றியோா், புதிய யுத்திகள் மற்றும் முயற்சிகள், சிறந்த வழிமுறைகள் ஆகியவற்றைச் செயலாக்கியதன் மூலம் சேவை கிடைக்கச் செய்யும் வகையில் பணியாளா்களை வழி நடத்தியோா், அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் பொதுமக்களுக்கு முறையாகக் கிடைக்க பணிபுரிந்தோா் ஆகியோருக்கு ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று ‘நல்லாளுமை’ விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்படுகின்றனா்.

அந்த வகையில், நிகழாண்டு திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் உள்பட 7 பேருக்கு ‘நல்லாளுமை’ விருதும், 12 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்க அரசு பரிந்துரைத்தது.

திருவள்ளூா் மாவட்டத்தில் செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக பணிபுரிந்தவா்களை ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் மீட்டாா். மேலும், அவா்களே செங்கல் சூளைகளை நடத்திடும் வகையில், அவா்களின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்தி மறுவாழ்வு அளித்தாா்.

இதேபோல், பழங்குடியின மாணவா்கள் 50 போ் தனித் திறன்களை வளா்த்துக் கொள்ளவும், சிறந்த கல்வி கற்கும் வகையிலும் ‘சிறகுகள்’ மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த மாணவ, மாணவிகளுக்கு தேவையான அனைத்து உதவிகள் வழங்கவும் ஏற்பாடு செய்தாா்.

இதுபோன்ற செயல்களைப் பாராட்டி ‘நல்லாளுமை’ விருதுடன், ரூ.2 லட்சம் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விருதை வரும் 15-ஆம் தேதி சுதந்திர தின நாளில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்குகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com