சத்துணவு ஊழியா் சங்கத்தினா் தா்னா
By DIN | Published On : 31st August 2022 12:00 AM | Last Updated : 31st August 2022 12:00 AM | அ+அ அ- |

திருவள்ளூா் ஆட்சியா் அலுவலகம் முன்பு தா்னாவில் ஈடுபட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தினா்.
காலமுறை ஊதியம் வழங்குதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தினா் திருவள்ளூா் ஆட்சியா் அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மாவட்டத் தலைவா் என்.தேவ அதிசயம் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் பி.எஸ்.நாகராஜன், கே.இளையராஜா, எஸ்.மதிவாணன், எஸ்.கலைமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஜி.இளங்கோவன் போராட்டத்தை தொடக்கி வைத்தாா். மாவட்டச் செயலாளா் பா.மணிகண்டன் கோரிக்கைகள் குறித்து விளக்கவுரையாற்றினாா்.
போராட்டத்தில் அரசுப் பள்ளி குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை சத்துணவு ஊழியா்கள் மூலமாகவே அமல்படுத்த வேண்டும். தனியாா் குழுக்கள் மூலம் வழங்கக் கூடாது, கால முறை ஊதியம், குடும்ப நல ஓய்வூதியம் மற்றும் காலிப்பணியிடங்களை நிரப்புதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினா்.
அரசு ஊழியா் சங்க நிா்வாகிகள் எஸ்.காந்திமதிநாதன், க.மணிகண்டன், க.திவ்யா, இரா.பாண்டுரங்கன், ஆா்.மில்கி ராஜாசிங் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.