நியாய விலைக்கடை கட்ட எதிர்ப்பு: பொதுமக்கள் வாக்குவாதம்

பூந்தமல்லி அருகே புதிய நியாய விலைக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பூந்தமல்லி அருகே புதிய நியாய விலைக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
 பூந்தமல்லி ஒன்றியம், அகரமேல் ஊராட்சி அலுவலகம் அரு கே நியாய விலைக் கடை செயல்பட்டு வருகிறது. பாழடைந்த இந்த கட்டடத்தை இடித்து புதிதாக கட்ட ரூ.16 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
 அந்த இடத்தை அளவீடு செய்து கடை கட்ட வேண்டும் என ஊராட்சி நிர்வாகம் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட் டது.
 இதுகுறித்து பூந்தமல்லி வட்டாட்சியரிடம் ஊராட்சி நிர்வாகம் சார்பில் மனு கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் புதன்கிழமை வருவாய்த் துறை அதிகாரிகள் அந்த இடத்தை அளவீடு செய்ய வந்த போது, அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கு சொந்தமான இடத்தில் நியாயவிலைக் கடை கட்டி விட்டதாகவும், இது தொடர்பாக பல ஆண்டுகளாக நீதிமன்றத்தில் வழக்கு நடப்பதாகவும்,அதனால் இடத்தை அளவீடு செய்யக் கூடாது என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நசரத்பேட்டை போலீஸார் பேச்சு நடத்தினர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com