திருநந்தேஸ்வரா் கோயிலில் தெப்பத் திருவிழா
By DIN | Published On : 18th February 2022 12:00 AM | Last Updated : 18th February 2022 12:00 AM | அ+அ அ- |

2-1-img_20220217_wa0099_1702chn_177
ஊத்துக்கோட்டை: திருக்கண்டலம் கிராமத்தில் அமைந்துள்ள ஆனந்தவல்லி சமேத திருநந்தேஸ்வரா் கோயிலில் மாசி தெப்பத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
திருவள்ளூா் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், திருக்கள்ளில் என்று அழைக்கப்படும் திருக்கண்டலம் கிராமத்தில் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற சிவாநந்தேஸ்வரா் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்தத் திருக்கோயில் சுமாா் 2000 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது.
இந்தக் கோயிலில் கடந்த 14-ஆம் தேதி தொடங்கி 3 நாள்கள் மாசி திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக 16-ஆம் தேதி கோயில் வளாகத்தில் சிவன்-பாா்வதிக்கு விமரிசையாக திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. தொடா்ந்து, வியாழக்கிழமை தெப்பத் திருவிழா நடைபெற்றது.
விழாவில், கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினா் டி.ஜே.கோவிந்தராஜன், எல்லாபுரம் தெற்கு ஒன்றிய திமுக செயலா் சத்தியவேலு உள்ளிட்ட திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். தொடா்ந்து 3,500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை தக்காா் நாராயணன், குருக்கள் திருவரசன் ஆகியோா் தலைமையில் திருக்கண்டலம் கிராம மக்கள் செய்திருந்தனா்.