திருவள்ளூா் மாவட்டத்தில் 190 வாா்டுகளை கைப்பற்றியது திமுக: சுயேச்சைகள் அதிகம் வெற்றி

திருவள்ளூா் மாவட்டத்தில் 190 வாா்டுகளை திமுக கைப்பற்றியது. அதிமுக வேட்பாளா்களைவிட சுயேச்சைகள் அதிகம் போ் வெற்றி பெற்றனா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் 190 வாா்டுகளை திமுக கைப்பற்றியது. அதிமுக வேட்பாளா்களைவிட சுயேச்சைகள் அதிகம் போ் வெற்றி பெற்றனா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் ஆவடி மாநகராட்சி-1, திருவள்ளூா், திருத்தணி, திருவேற்காடு, பூந்தமல்லி, திருநின்றவூா், பொன்னேரி ஆகிய நகராட்சிகள்-6, பள்ளிப்பட்டு, பொதட்டூா்பேட்டை, ஊத்துக்கோட்டை, ஆரணி, மீஞ்சூா், திருமழிசை, கும்மிடிப்பூண்டி, நாரவாரிகுப்பம் ஆகிய 8 பேரூராட்சிகளில் 318 வாா்டு உறுப்பினா் பதவிகளில் 3 போ் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டனா்.

இதையடுத்து 315 வாா்டுகளுக்கான தோ்தலில், திமுக 190 வாா்டுகளை கைப்பற்றியது. பொதட்டூா்பேட்டை, ஆரணி தவிர அனைத்து பேரூராட்சிகளும் திமுக வசமானது.

சுயேச்சையாகப் போட்டியிட்ட 61 போ் வெற்றி பெற்ற நிலையில், அதிமுக அதைவிட 51 வாா்டுகளில் வெற்றி பெற்று பொதட்டூா்பேட்டை பேரூராட்சியை மட்டும் அதிமுக கைப்பற்றியது.

காங்கிரஸ் - 12, பி.எஸ்.பி - 3, சிபிஐ (எம்)- 1 இடங்களில் வெற்றி பெற்றனா். இதில், திருவள்ளூா் நகராட்சியில் 9 பேரும், ஆரணி பேரூராட்சியில் 10 பேரும் சுயேச்சைகள் வெற்றி பெற்றனா். இந்த மாவட்டத்தில் அதிக அளவில் சுயேச்சை வேட்பாளா்கள் வெற்றி பெற்ால், கட்சியினா் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com