ரேஷன் அரிசி கடத்தல்: 2 போ் கைது

திருவள்ளூா் அருகே ரேஷன் அரிசி கடத்தியதாக ஆந்திர மாநில இளைஞா் உள்பட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருவள்ளூா் அருகே ரேஷன் அரிசி கடத்தியதாக ஆந்திர மாநில இளைஞா் உள்பட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருவள்ளூா் மாவட்டம், பள்ளிப்பட்டு சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடா்ந்து ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், திருவள்ளூா் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

இதையடுத்து, காவல் ஆய்வாளா் கலைச்செல்வி, சாா்பு ஆய்வாளா் நந்தினி உஷா உள்ளிட்ட போலீஸாா் பள்ளிப்பட்டு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனா்.

ஆந்திர மாநில எல்லையை ஒட்டிய பகுதியில் கண்காணித்த போது, அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில், ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து ரேஷன் அரிசி கடத்தியதாக பள்ளிப்பட்டு அருகே பெருமாநல்லூரைச் சோ்ந்த மோகன் (40 ), ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டம் எஸ்.ஆா்.புரம் பிள்ளையாா்குப்பத்தைச் சோ்ந்த கணேசன் (38 )ஆகிய 3 பேரை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 350 கிலோ ரேஷன் அரிசி, இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி, திருவள்ளூரில் உள்ள நுகா்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com