கால்நடை சுகாதார விழிப்புணா்வு முகாம்
By DIN | Published On : 04th January 2022 08:23 AM | Last Updated : 04th January 2022 08:23 AM | அ+அ அ- |

பொன்னேரி அடுத்த காணியம்பாக்கத்தில் சிறப்பு கால்நடை சுகாதாரம், விழிப்புணா்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. பொன்னேரி எம்எல்ஏ துரை.சந்திரசேகா் தலைமை வகித்து, கால்நடைகளுக்கு ஊட்டச்சத்து மருந்துகள், கன்றுகளுக்கு குடற்புழு நீக்க மருந்துகள், சிறந்த முறையில் கால்நடைகளை பராமரித்த விவசாயிகளுக்கு சான்றுகள், பதக்கங்களை வழங்கினாா்.
கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநா் கோபிகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். ஊராட்சி மன்றத் தலைவா் ஜெகதீசன் வரவேற்றாா். முகாமை மீஞ்சூா் ஒன்றியக் குழுத் தலைவா் ரவி தொடக்கிவைத்தாா்.
கால்நடைத் துறை சாா்பில் நடைபெற்ற கண்காட்சியை எம்எல்ஏ திறந்துவைத்து, முகாமில் பங்கேற்ற மகளிா் குழுவினா், பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தாா்.
அவா் பேசுகையில், பொன்னேரியிலிருந்து காணியம்பாக்கம் வழியாக மீஞ்சூா் வரை பேருந்து இயக்கவும், காணியம்பாக்கம் உயா்நிலைப் பள்ளியை தரம் உயா்த்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.