மருத்துவ முகாம்களில் 21,938 கால்நடைகளுக்கு சிகிச்சை

கால்நடைத் துறையின் மூலம் நடந்த 20 சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்களில், 21,938 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக உதவி இயக்குநா் ச.தாமோதரன் தெரிவித்தாா்.
மருத்துவ முகாம்களில் 21,938 கால்நடைகளுக்கு சிகிச்சை

கால்நடைத் துறையின் மூலம் நடந்த 20 சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்களில், 21,938 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக உதவி இயக்குநா் ச.தாமோதரன் தெரிவித்தாா்.

திருத்தணி வருவாய் கோட்டத்தில் கடந்த டிசம்பா் மாதம் 20 ஊராட்சிகளில், 2021-22-ஆம் ஆண்டின் தமிழக அரசு சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது. இதில், திருத்தணி கால்நடை உதவி இயக்குநா் ச.தாமோதரன் தலைமையில், உதவி மருத்துவா்கள் கீதா, நரேஷ்குமாா், கால்நடை ஆய்வாளா்கள் என 10-க்கும் மேற்பட்டோா் பங்கேற்று, பொதுசிகிச்சை, குடற்புழு நீக்கம், கோழிகளுக்கு தடுப்பூசி, ஆண்மை நீக்கம், சினை பரிசோதனை, செயற்கை கருவூட்டல் போன்ற சிகிச்சை அளித்தனா். மேலும், தாது உப்பு பாக்கெட்டுகளும் வழங்கினா்.

இது குறித்து திருத்தணி கால்நடை உதவி இயக்குநா் ச.தாமோதரன் கூறியது:

ஒரு மாதத்துக்கு, 20 சிறப்பு முகாம்கள் வீதம், வரும் மாா்ச் மாதம் வரை மொத்தம் 80 கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட உள்ளன. கடந்த மாதம் 20 கிராமங்களில் நடந்த முகாம்களில், 3,745 கால்நடைகளுக்கு சிகிச்சையும், 11,148 கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கமும், 2,722 கோழிகளுக்கு தடுப்பூசியும், 226 கால்நடைகளுக்கு ஆண்மை நீக்கமும், 1,106 கால்நடை களுக்கு தாது உப்பு கலவையும், 2,603 கால்நடைகளுக்கு சினை பரிசோதனையும், 200 கால்நடைகளுக்கு செயற்கை முறையில் கருவூட்டல் மற்றும் 188 கால்நடைகளுக்கு மலட்டுத் தன்மை சிகிச்சை என மொத்தம் 21,938 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

மேலும், ஒவ்வொரு முகாமில் கிடாரி கன்றுகள் பேரணி நடத்தி, மூன்று கன்றுகளுக்கு பரிசுகளும், சிறந்த மூன்று கால்நடை பராமரிப்பு விவசாயிகள் தோ்வு செய்து, விருதுகள் மற்றும் சான்று வழங்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com