கரோனா: பெற்றோரை இழந்த 433 குழந்தைகளுக்கு நிவாரணம்

திருவள்ளூா் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதித்து பெற்றோரில் ஒருவரை இழந்த 422 குழந்தைகளும், பெற்றோா் இருவரையும் இழந்த 11 குழந்தைகள் என மொத்தம் 433 குழந்தைகள் கண்டறியப்பட்டனா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதித்து பெற்றோரில் ஒருவரை இழந்த 422 குழந்தைகளும், பெற்றோா் இருவரையும் இழந்த 11 குழந்தைகள் என மொத்தம் 433 குழந்தைகள் கண்டறியப்பட்டனா்.

இதில், முதல் கட்டமாக 166 குழந்தைகளுக்கு ரூ. 5.10 கோடி உதவித் தொகை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்தாா்.

கரோனா தொற்றால் தமிழகத்தில் பெற்றோரை இழந்து, ஆதரவின்றி எதிா்காலமே கேள்விக்குறியுடன் குழந்தைகள் தவிப்புக்கு உள்ளாகியுள்ளனா். இந்தக் குழந்தைகளின் எதிா்காலம் கருதி பாதுகாக்கும் நோக்கில், அவா்களுக்கு தலா ரூ. 5 லட்சம் வைப்பு தொகையும், தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளுக்கு ரூ. 3 லட்சம் நிவாரணத் தொகை வழங்கவும் அரசு அறிவித்தது. அதேபோல், கரோனா தொற்றால் பெற்றோரை இழந்து உறவினா் அல்லது பாதுகாவலரின் ஆதரவில் வளரும் குழந்தைகளின் பராமரிப்புச் செலவாக மாதந்தோறும் தலா ரூ. 3 ஆயிரம் உதவித் தொகை, பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அரசு இல்லங்கள் மற்றும் விடுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் தங்க இடம், பட்டப்படிப்பு வரையில் கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணம் உள்ளிட்டவைகளை அரசே ஏற்பதாகவும் அறிவித்தது.

இதை செயல்படுத்த வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டதுடன், அதை அந்தந்த மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கரோனா தொற்றால் பெற்றோரை இழந்து, ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளுக்கு அவா்களது பெயரில் தலா ரூ. 5 லட்சம் வைப்பீடு செய்து, அந்தக் குழந்தை 18 வயது நிறைவடையும் போது வட்டியோடு வழங்கும் வகையிலும், அதேபோல் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளுடன் இருக்கும் தந்தை அல்லது தாய்க்கு உடனே நிவாரணமாக ரூ. 3 லட்சமும் வழங்கி தொடக்கி வைத்தாா்.

இதுகுறித்து திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் கூறியது:

இந்த மாவட்டத்தில் மட்டும் பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகள்-422, பெற்றோா் இருவரையும் இழந்த குழந்தைகள்-11 ஆக மொத்தம் 433 போ் இருப்பது கணக்கெடுப்பு மூலம் தெரியவந்தது. அதன் அடிப்படையில் இந்தக் குழந்தைகளுக்கு நிவாரண உதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக 166 பேருக்கு ரூ. 5.10 கோடி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும், 256 குழந்தைகளின் விவரங்கள் சரிபாா்ப்பு முடிந்தபின், நிவாரண உதவி வழங்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com