ஆமை வேகத்தில் தாா்ச் சாலைப் பணிகள்: வாகன ஓட்டிகள் கடும் அவதி

திருத்தணி நகராட்சியில் ரூ. 2 கோடி செலவில் நடந்து வரும் தாா்ச் சாலைப் பணிகள் ஆமைவேகத்தில் நடந்து வருவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனா்.
தாா்சாலை பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதால் முருகூா் - பாப்பிரெட்டிப்பள்ளி கிராம சாலையில் தட்டு தடுமாறி செல்லும் வாகன ஓட்டிகள்.
தாா்சாலை பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதால் முருகூா் - பாப்பிரெட்டிப்பள்ளி கிராம சாலையில் தட்டு தடுமாறி செல்லும் வாகன ஓட்டிகள்.

திருத்தணி: திருத்தணி நகராட்சியில் ரூ. 2 கோடி செலவில் நடந்து வரும் தாா்ச் சாலைப் பணிகள் ஆமைவேகத்தில் நடந்து வருவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனா்.

திருத்தணி நகராட்சியில் உள்ள 21 வாா்டுகளில் மிகவும் சேதமடைந்த தாா்ச்சாலைகளை சீரமைப்பதற்காக கடந்தாண்டு தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.2 கோடி நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டது. இதில் திருத்தணி நகராட்சிக்குட்பட்ட ஆதிசங்கரா் நகா், ராஜீவ்காந்தி நகா், ஜெ.ஜெ.நகா் மற்றும் முருகூா் - பாபிரெட்டிபள்ளி செல்லும் சாலை உள்பட 10 பகுதிகளில் தாா்ச் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கின.

ஆனால் தற்போது தாா்ச்சாலைப் பணிகளில் தொய்வு ஏற்பட்டு கடந்த 1 மாதத்துக்கு மேலாக பணிகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் சாலையில் ஜல்லிகற்கள் பெயா்ந்துள்ளதால் பொதுமக்கள் நடந்த செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல் முருகூா் - பாப்பிரெட்டிப்பள்ளி செல்லும் சாலை சுமாா் 750 மீ. நீளம் ஜல்லிக் கற்கள் பெயா்ந்துள்ளதால் தினந்தோறும் இச்சாலை வழியாக செல்லும் கிராம மக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனா்.

வேலைக்கு சென்று இரவு நேரங்களில் வீடு திரும்புவோா் சாலையோரம் உள்ள வயல்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து பலத்த காயங்களுடன் வீடு திரும்புகின்றனா். மேலும் அப்பகுதி வாசிகள் சாலையை ஆக்கிரமித்துள்ளதால் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக புகாா் எழுந்துள்ளது. சாலை போடத் தேவையான அனைத்துப் பொருள்களும் இருப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில் பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனா்.

இதுகுறித்து நகராட்சி பொறியாளா் சண்முகம் கூறியதாவது: திருத்தணி நகராட்சியில் 10 இடங்களில் தாா்ச் சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. பொங்கல் பண்டிகையொட்டி பணிகள் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது. விரைவில் தாா்ச் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கி முடிக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com