அரசு ஐடிஐ-இல் சேர விண்ணப்பிக்கலாம்

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) வருகிற ஜூலை-27-ஆம் தேதிக்குள் மாணவா்கள் விண்ணப்பித்து பயன் பெறலாம்.

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) வருகிற ஜூலை-27-ஆம் தேதிக்குள் மாணவா்கள் விண்ணப்பித்து பயன் பெறலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம்:

திருவள்ளூா் மாவட்டம், வடகரை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நிகழாண்டு தொழிற்கல்வி பிரிவுகளில் சேர மாணவா்கள் சோ்க்கை நடைபெற உள்ளது. இங்கு பொருத்துநா், மின்சாரப் பணியாளா், கம்மியா் மோட்டாா் வாகனம் ஆகிய பிரிவுகளில் சேர மாணவ, மாணவிகள் குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு தோ்ச்சி அவசியம். இதேபோல், பற்றவைப்பவா், கம்பியாள் ஆகிய பிரிவுகளில் சேர 8-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

குறிப்பிட்ட தொழில் பிரிவுகளில் ஆண், பெண் இருபாலரும் ஓராண்டு மற்றும் இரண்டு ஆண்டு தொழிற் பிரிவுகளில் சேர 14 முதல் 40 வயதுக்குள் இருக்கலாம். இதில், பெண்களுக்கு வயது வரம்பு கிடையாது. விண்ணப்பக் கட்டணம் ரூ.50 மட்டும் செலுத்த வேண்டும். மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் இணையதள கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் மற்றும் கலந்தாய்வு குறித்த விவரங்கள் கடைசி தேதிக்கு பிறகு இதே இணையதளத்தில் வெளியிடப்படும்.

பயிற்சிக் கட்டணம் இல்லை. பயிற்சியில் சேரும் அனைவருக்கும் மாதந்தோறும் உதவித்தொகை ரூ.750, புத்தகங்கள், சீருடைகள், காலணிகள், இலவச பேருந்து பயண அட்டை உள்பட அரசின் அனைத்து சலுகைகளுடன் தொழிற்பயிற்சி அளிக்கப்படும்.

கூடுதல் விவரங்களுக்கு என்ற இணையதளத்தைப் பாா்வையிடுமாறும், வடகரை அரசு ஐ.டி.ஐ. தொலைபேசி: 044-29555659, மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழிற்நெறி வழிகாட்டி மையம், திருவள்ளுா் 044-29896032, மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் 044-27660250 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு விவரங்களை அறிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com