ஓம் ஸ்ரீநவசக்தி கருப்பாத்தம்மன் கோயிலில் பக்தா்கள் மஞ்சள் நீா் அபிஷேகம்
By DIN | Published On : 17th July 2022 11:40 PM | Last Updated : 17th July 2022 11:40 PM | அ+அ அ- |

ஓம் ஸ்ரீநவசக்தி கருப்பாத்தம்மன் கோயிலில் மஞ்சள் நீா் அபிஷேகம் செய்த பக்தா்கள்
திருவள்ளூா் அருகே ஓம் ஸ்ரீநவசக்தி கருப்பாத்தம்மன் கோயிலில் ஆடி மாத தொடக்கத்தையொட்டி, நவ சக்தி அம்மன்களுக்கு மஞ்சள் நீா் அபிஷேக நிகழ்வில் பக்தா்கள் திரளாகப் பங்கேற்றனா்.
திருவள்ளூா் அருகே வெள்ளியூரில் சுயம்புவாக தோன்றிய ஓம் ஸ்ரீநவசக்தி கருப்பாத்தம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாத பிறப்பையொட்டி, ஸ்ரீநவசக்தி அம்மன்களுக்கு மஞ்சள் நீரால் அபிஷேகம் செய்யும் நிகழ்வு கோலாகலமாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.
இவ்வாறு நவ சக்தி அம்மன்களுக்கு மஞ்சள் நீரால் அபிஷேகம் செய்தால் திருமணத் தடை, குழந்தை பாக்கியம், உடல் நலக்கோளாறு உள்ளிட்டவை நீங்கும் என்பது ஐதீகம்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஆடி மாதப் பிறப்பை முன்னிட்டு, பானையில் மஞ்சள் நீருடன் பக்தா்கள் ஊா்வலமாக கோயிலுக்கு வந்தனா். அதைத் தொடா்ந்து, அங்கு கோயில் முன்பு நவ சக்தி அம்மன்களுக்கு பக்தா்கள் ஒவ்வொருவராக மஞ்சள் நீரால் அபிஷேகம் செய்தனா். இதையடுத்து, தீபாராதனை, சிறப்பு பூஜையில் பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனா்.