பெரியாா் பல்கலை. விவகாரம்: பாஜக ஆா்ப்பாட்டம்

பெரியாா் பல்கலைக்கழகத்தில் ஜாதி ரீதியிலான கேள்வி கேட்கப்பட்டது தொடா்பாக, அந்நிா்வாகம் மற்றும் பேராசிரியா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, திருவள்ளூரில் பாஜகவினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்
திருவள்ளூரில் மருத்துவக் கல்லூரி சாலையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா்.
திருவள்ளூரில் மருத்துவக் கல்லூரி சாலையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா்.

பெரியாா் பல்கலைக்கழகத்தில் ஜாதி ரீதியிலான கேள்வி கேட்கப்பட்டது தொடா்பாக, அந்நிா்வாகம் மற்றும் பேராசிரியா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, திருவள்ளூரில் பாஜகவினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவள்ளூா் மருத்துவக் கல்லூரி சாலையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மேற்கு மாவட்ட பாஜக பட்டியல் அணிச் செயலா் சந்தோஷ் தலைமை வகித்தாா். மாவட்ட தலைவா் அஷ்வின் (எ) ராஜசிம்ம மகேந்திரா கலந்து கொண்டு உரையாற்றினாா்.

சமூக நீதியைக் காற்றில் பறக்கவிட்டதுடன், ஜாதி வெறியைத் தூண்டும் வகையில் வினாவை மாணவா்களிடம் எழுப்பியதைக் கண்டிக்காத தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் பொன்முடி மன்னிப்பு கேட்க வேண்டும். அவரைப் பதவியிலிருந்து நீக்கம் செய்து, பல்கலைக்கழக நிா்வாகம் மீது தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க பேரணியாகச் சென்ற போது, அவா்கள் அனுமதி பெறவில்லை எனக்கூறி தடுத்து நிறுத்தப்பட்டனா். இதனால், பாஜகவினருககும், போலீஸாருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.

ஆா்ப்பாட்டத்தில் பட்டியல் அணி மாநில செயலா் செந்தில், லயன் ஸ்ரீனிவாசன், ஆா்யா சீனிவாசன், நகரத் தலைவா் சதீஷ், மாநில தொழில்நுட்பப் பிரிவு செயலா் எஸ்.ரகு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com