கும்மிடிப்பூண்டி: உலக யோகா தினத்தில் 21 மாணவர்கள் 21 முறை சூரிய நமஸ்காரம் செய்து சாதனை

கும்மிடிப்பூண்டியில் உள்ள மகாராஜா அக்ரசன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 8- வது உலக யோகா தினத்தையொட்டி 21 மாணவர்கள் 21 முறை சூரிய நமஸ்காரம் செய்து புதிய சாதனை படைத்தனர்.
கும்மிடிப்பூண்டி: உலக யோகா தினத்தில் 21 மாணவர்கள் 21 முறை சூரிய நமஸ்காரம் செய்து சாதனை

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியில் உள்ள மகாராஜா அக்ரசன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 8- வது உலக யோகா தினத்தையொட்டி 21 மாணவர்கள் 21 முறை சூரிய நமஸ்காரம் செய்து புதிய சாதனை படைத்தனர்.

கும்மிடிப்பூண்டியில் உள்ள மஹாராஜா அக்ரசன் மெட்ரிக் மேல்நிலைப்  பள்ளியில்  எட்டாவது உலக யோகா தினத்தையொட்டி நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் யோகாவின் அவசியத்தை உணர்த்தும் வகையிலான பதாகைகளை ஏந்தி மாபெரும் யோகா பேரணியில் ஈடுபட்டனர்.

அப்போது அப்பள்ளி மாணவர்கள் யோகாவில் புதிய சாதனையாக 21 மாணவர்கள் ஒரே நேரத்தில் 21 முறை சூரிய நமஸ்காரம் செய்து யோகா புக் ஆப் ரெகார்ட் புத்தகத்தில் இடம்பெற்று புதிய சாதனை படைத்து அசத்தினார்கள். இந்த சாதனை நிகழ்வின் போது யோகாவைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திய  யோகா பயிற்சி ஆசிரியர் காளத்தீஸ்வரன் அனைத்துப் பள்ளிகளிலும் யோகாவை கட்டாயப் பாடமாக்க வேண்டும் என தமிழக அரசுக்கு வேண்டுகோள் வைத்தார். 

மேலும் மஹாராஜா அக்ரஷன் பள்ளி நிர்வாகம் சார்பில் மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு விளையாட்டு நிகழ்வுகளை நடத்தி வருவதாகவும்  யோகா, சிலம்பம், பரதம், தற்காப்பு கலைகளுக்கு முக்கியத்துவம் தருவதாக  யோகா ஆசிரியர் காளத்தீஸ்வரன் கூறினார்.

 இந்த நிகழ்வில் பள்ளி தாளாளர்கள் சுஷீல் ஷரப், பூனம் ஷரப், பள்ளி முதல்வர் மாலதி, உடற்கல்வி ஆசிரியர் விக்னேஷ் மற்றும் சக ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என பெருந்திரளாக பங்கேற்று பொதுமக்களுக்கு யோகா விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும் இந்த விழாவில் 8-வது உலக யோகா தினத்தை ஒட்டி தமிழ்நாடு யோகா குழு சார்பில், யோகா கலை செல்வர் விருதை பெற்ற யோகா ஆசிரியர் எஸ்.காளத்தீஸ்வரனுக்கு பள்ளி ஆசிரியர்களுக்கும் மாணவர்களும் பாராட்டி, கௌரவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com