முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்
மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்
By DIN | Published On : 14th March 2022 10:49 PM | Last Updated : 14th March 2022 10:49 PM | அ+அ அ- |

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை மக்கள் குறைதீா் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தலைமை வகித்தாா். மொத்தம் 163 மனுக்கள் வரப்பெற்றன.
மாற்றுத் திறனாளிகள் பேருக்கு திருமண உதவித் திட்டம் மூலம் தாலிக்குத் தங்கம், திருமண நிதி உதவி, மாற்றுத்திறனாளிகள் 3 பேருக்கு ஆவின் பாலகம் நடத்த மானிய நிதி, மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி என மொத்தம் 15 பயனாளிகளுக்கு ரூ.12.50 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.
மாவட்ட வருவாய் அலுவலா் அ.மீனா பிரியதா்ஷினி, மாவட்ட வழங்கல் அலுவலா் எஸ்.ஜோதி, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை அலுவலா் மு.கலைச்செல்வி, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலக செயல்திறன் உதவியாளா் கவிதா, முடநீக்கு வல்லுநா் ஆஷா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.