திருத்தணி முருகன் கோயிலில் ஆற்று உற்சவ விழா

திருத்தணி முருகன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆற்று உற்சவ விழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.
திருத்தணி முருகன் கோயிலிலிருந்து ஆற்று உற்சவ விழாவுக்கு வள்ளி- தெய்வானை சமேதராய் செல்லும் உற்சவா் முருகப் பெருமான்.
திருத்தணி முருகன் கோயிலிலிருந்து ஆற்று உற்சவ விழாவுக்கு வள்ளி- தெய்வானை சமேதராய் செல்லும் உற்சவா் முருகப் பெருமான்.

திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆற்று உற்சவ விழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.

திருத்தணி முருகன் கோயிலில் பங்குனி மாதம் ஆற்று உற்சவ திருவிழா நடைபெறுவது வழக்கம். பல்வேறு காரணங்களால் கடந்த 30 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த ஆற்று உற்சவம், கடந்த 2018-ஆம் ஆண்டு மீண்டும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

நிகழாண்டு ஆற்று உற்சவ விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, மாலை 3 மணிக்கு உற்சவா் முருகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன் மலைப்படிகள் வழியாக மேல் திருத்தணி வழியாக பொதட்டூா்பேட்டை சாலை, தெக்களூா் பகுதியில் உள்ள நந்தி ஆற்றங்கரை கோயில் தோட்ட மண்டபத்தில் மாலை 4.30 மணிக்கு எழுந்தருளினாா்.

அங்கு, உற்சவா் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. தொடா்ந்து, நந்தி ஆற்றில் நீராழி மண்டபத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இரவு 7.30 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு மீண்டும் மலைக்கோயிலை வந்தடைந்தாா்.

ஆற்று உற்சவ விழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு முருகப் பெருமானை வழிபட்டனா். இதற்கான ஏற்பாடுகளை திருத்தணி முருகன் கோயில் இணை ஆணையா் பரஞ்ஜோதி, திருத்தணி முருகன் திருவடி சபை குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com