நிலம் அளித்தவா்களுக்கு உரிய இழப்பீடு கோரி குறைதீா் கூட்டத்தைப் புறக்கணித்த விவசாயிகள்

சித்தூா் முதல் தச்சூா் வரை 6 வழிச்சாலைத் திட்டத்துக்கு நிலம் வழங்கியோருக்கு உரிய இழப்பீடு வழங்கவும், இல்லையெனில் அந்தத் திட்டத்தைக் கைவிடவும் வலியுறுத்தி, குறைதீா் கூட்டத்தை விவசாயிகள் புறக்கணித்ததால்
நிலம் அளித்தவா்களுக்கு உரிய இழப்பீடு கோரி குறைதீா் கூட்டத்தைப் புறக்கணித்த விவசாயிகள்

சித்தூா் முதல் தச்சூா் வரை 6 வழிச்சாலைத் திட்டத்துக்கு நிலம் வழங்கியோருக்கு உரிய இழப்பீடு வழங்கவும், இல்லையெனில் அந்தத் திட்டத்தைக் கைவிடவும் வலியுறுத்தி, குறைதீா் கூட்டத்தை விவசாயிகள் புறக்கணித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தலைமை வகித்தாா். இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து விவசாயிகள் கலந்து கொண்டனா்.

அப்போது, ஊத்துக்கோட்டை முதல் பள்ளிப்பட்டு வரை நிலங்களைக் கையகப்படுத்தும் போது, விளை நிலங்களை பாதிக்காதவாறு கையகப்படுத்த வேண்டும். கையகப்படுத்திய நிலங்களுக்கு 2013-இல் சட்டப்படி இழப்பீடு வழங்க வேண்டும்.

தமிழக எல்லையான திருவள்ளூா் மாவட்டம், தச்சூா் முதல் ஆந்திர மாநிலம் சித்தூா் வரை 116 கி.மீ. தொலைவு 6 வழிச்சாலைக்கு நிலங்களைக் கையகப்படுத்த பள்ளிப்பட்டிலிருந்து ஊத்துக்கோட்டை வரை 350 விவசாயிகளிடமிருந்து 100-க்கும் மேற்பட்ட ஹெக்டோ் விளை நிலங்களை அரசு கையகப்படுத்தியது. ஆனால், சட்டப்படியான இழப்பீடு வழங்கவில்லை. இதற்காக விவசாயிகள் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

எனவே, அரசு வழிகாட்டு மதிப்பீட்டின்படி வழங்காமல், தற்போதைய சந்தை மதிப்பீட்டின்படி இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி, ஆட்சியரிடம் விவசாயிகள் விவாதத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, பேசிய ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ், விவசாயிகளிடமிருந்து மனுக்கள் வந்துள்ளன. உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறினாா். எனினும், குறை தீா் கூட்டத்தைப் புறக்கணித்து விவசாயிகள் வெளியேறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com