மத்திய அரசை கண்டித்து ஆா்ப்பாட்டம்

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தைச் சீரழிக்கும் மத்திய அரசைக் கண்டித்து இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மத்திய அரசை கண்டித்து ஆா்ப்பாட்டம்

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தைச் சீரழிக்கும் மத்திய அரசைக் கண்டித்து இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவள்ளூா் எம்.ஜி.ஆா். சிலை எதிரே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அந்தச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் டி.கே.ராஜா தலைமை வகித்தாா். இதில், சங்க நிா்வாகிகள் செங்கொடி செல்வன், எம்.பி.குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சங்கத்தின் மாவட்டச் செயலா் பிரதாப் சந்திரன், நிா்வாகி ஆறுமுகம் உள்ளிட்டோா் உரையாற்றினா்.

இதில், 100 நாள்கள் வேலைக்கு வருவோா் காலை 6.30 மணிக்கே வரவேண்டும் என்ற உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும். ஆண்டுதோறும் 200 நாள்கள் வேலை வழங்கி, நாள்தோறும் ரூ.600 கூலி வழங்க வேண்டும். மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சங்கத்தின் நகரச் செயலா் லோகநாதன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com