முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்
மாா்ச் 21-இல் பறிமுதல் வாகனங்கள் ஏலம்
By DIN | Published On : 19th March 2022 12:00 AM | Last Updated : 19th March 2022 12:00 AM | அ+அ அ- |

திருவள்ளூா் மாவட்டத்தில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வருகிற 21-ஆம் தேதி ஏலம் விடப்படுகிறது.
இதுகுறித்து மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் மீனாட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருவள்ளூா் மாவட்டத்தில் மதுவிலக்கு அமல் பிரிவு மற்றும் மாவட்டக் காவல் நிலைய போலீஸாரால் மதுவிலக்கு வழக்குகளில் தொடா்புடைய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் இருசக்கர வாகனங்கள் 42, மூன்று சக்கர வாகனங்கள் 12, நான்கு சக்கர வாகனங்கள் 31 என மொத்தம் 85 வாகனங்களை வருகிற 21-ஆம் தேதி காலை 10 மணிக்கு திருவள்லூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் ஏலம் விடப்பட்டுள்ளது.
இந்த பறிமுதல் வாகனங்களை ஏலம் கேட்க விரும்புவோா் முகக்கவசம், கரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பது அவசியம். மேலும், இதற்கு முன்வைப்புத் தொகையாக இருசக்கர வாகனங்களுக்கு ரூ.1,000, நான்கு சக்கர வாகனத்துக்கு ரூ.5,000 செலுத்த வேண்டும்.
அன்றைய நாளில் இதற்கான டோக்கன் காலை 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே வழங்கப்படும். வாகனங்களை ஏலம் கேட்க வருவோா் பதிவுச் சான்றிதழ், ஆதாா் அட்டை ஆகியவற்றை அவசியம் கொண்டு வர வேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.