கும்மிடிப்பூண்டி: 602 பயனாளிகளுக்கு ரூ.2,34,39,278 நகைக் கடன் தள்ளுபடி

கும்மிடிப்பூண்டி கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் சார்பில் புதன்கிழமை தமிழக முதல்வர்
கும்மிடிப்பூண்டி: 602 பயனாளிகளுக்கு ரூ.2,34,39,278 நகைக் கடன் தள்ளுபடி

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் சார்பில் புதன்கிழமை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த நகைக் கடன் தள்ளுபடி திட்டத்தில் 602 பயனாளிகளுக்கு நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டு அவர்களுக்குரிய சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

கும்மிடிப்பூண்டி பஜாரில் உள்ள கும்மிடிப்பூண்டி கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில் தமிழக முதல்வர் அறிவித்த நகைக் கடன் தள்ளுபடி திட்டத்தின் படி 602 பயனாளிகளுக்கு நகைக் கடன் தள்ளுபடி செய்து அவர்களுக்குரிய நகையை அவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு வங்கி வளாகத்தில் கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு கும்மிடிப்பூண்டி தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி தலைவர் ஆர்.அபிராமன் வரவேற்றார். இந்நிகழ்வில் தொடக்க வேளாண்மை வங்கி இயக்குனர்கள் பி.வெங்கடாசலபதி, எஸ்.உதயகுமார், டி.சி.மகேந்திரன், வி.ரவி, ஜெ.மணி முன்னிலை வகித்தனர்.

இந்த விழாவில் கும்மிடிப்பூண்டி பேருராட்சி தலைவர் சகிலா அறிவழகன், பேரூராட்சி கவுன்சிலர்கள் காளிதாஸ், கீதாராணி ராஜேந்திரன், விமலா அர்ச்சுனன், குமரகுரு,  திமுக பொதுக்குழு உறுப்பினர் பா.செ.குணசேகரன், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாவட்ட நிர்வாகி எஸ்.எம்.திருநாவுக்கரசு வாழ்த்துரை வழங்கினார்கள்.

இதைத் தொடர்ந்து விழாவில் சிறப்புரையாற்றிய கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. டி.ஜெ.கோவிந்தராஜன் பேசுகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தலின் போது அறிவித்த நகைக் கடன் தள்ளுபடி தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டது தமிழக மக்களை மகிழ்ச்சிக்குள் ஆளாக்கியுள்ளது என்றார். 

கும்மிடிப்பூண்டி கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில் 602 நகைக் கடன் பயனாளிகளுக்கு, அசல் தள்ளுபடியாக ரூ.2,12,08,407, வட்டி தள்ளுபடியாக ரூ.21,08,991, அபராத வட்டி தள்ளுபடியாக ரூ.1,21,880 என மொத்தம் ரூ.2,34,39,278 கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து விழாவில் நகைக் கடன் பெற்ற 602 பயனாளிகளுக்கும் 15,000 கிராம் எடையுள்ள 1,875 சவரன் நகைகள், நகை தள்ளுபடிக்கான சான்றிதழ்களை கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் வழங்கினார். விழாவின் முடிவில் வங்கி செயலாளர் ஜெ.உமாபதி நன்றி கூறினார்.

இந்த நிகழ்வில் கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் மு.மணிபாலன், நகர திமுக செயலாளர் அறிவழகன், கீழ்முதலம்பேடு ஊராட்சி தலைவர் கே.ஜி.நமச்சிவாயம், திமுக வழக்குரைஞர்கள் பரத்குமார், தீனதயாளன், திமுக நிர்வாகிகள் டி.கே.ராஜா, சி.சீனிவாசன், ஒன்றிய கவுன்சிலர் வி.எம்.எஸ்.சீனிவாசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com