திருவள்ளூரில் புத்தகத் திருவிழா: பொதுமக்களுக்கு கலைநிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு

திருவள்ளூரில் புத்தகத் திருவிழா குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவர்களுடைய கிராமிய கலைநிகழ்ச்சியை ஏராளமானோர் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.
திருவள்ளூரில் புத்தகத் திருவிழா: பொதுமக்களுக்கு கலைநிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு

திருவள்ளூர்: திருவள்ளூரில் புத்தகத் திருவிழா குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவர்களுடைய கிராமிய கலைநிகழ்ச்சியை ஏராளமானோர் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளிடையே வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்க வேண்டும். இதைக் கருத்திற்கொண்டு தமிழக முதல்வர் மாவட்டந்தோறும் புத்தகத் திருவிழா நடத்துவதற்கு உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தகப் பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர் சங்கம் சார்பில் புத்தகத் திருவிழா ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் ஏப்.1 முதல் 11 ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது. 

அதனால், இந்த விழா குறித்து பல்வேறு வகைகளில் மாவட்ட நிர்வாகம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

இதன் அடிப்படையில் திருவள்ளூர் உழவர்சந்தை எதிரே மாணவர்கள் மற்றும் கிராமிய கலைக்குழு மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆறுமுகம் தலைமை வகித்தார். இதில், கோட்டாட்சியர் ரமேஷ் பங்கேற்று கலைநிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். 

அப்போது, மாணவர்கள் காலையில் எழுந்ததில் இருந்து இரவு வரையில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் புத்தகம் வாசிக்க வேண்டும். அதேபோல், என்ன செய்யக் கூடாது என்பது குறித்து விளக்கமாக எடுத்துரைத்தனர். அதேபோல் கிராமிய கலைக்குழுவினரும் புத்தகங்களை வாசிப்பதின் மூலம் அறிவு வளரும் என்பதை விளக்கமாக எடுத்துரைத்து, புத்தகத் திருவிழாவிற்கு குடும்பங்களுடன் வரவேண்டும் என கலைநிகழ்ச்சி மூலம் எடுத்துரைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) வித்யா, வட்டாட்சியர் செந்தில்குமார், காவல் துணைக் கண்காணிப்பாளர் சந்திரகாசன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பூபாலமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதை பொதுமக்கள் அனைவரும் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com