முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்
சித்திரை மாத கிருத்திகை திருத்தணி முருகன் கோயிலில் குவிந்த பக்தா்கள்
By DIN | Published On : 03rd May 2022 12:06 AM | Last Updated : 03rd May 2022 12:06 AM | அ+அ அ- |

சித்திரை மாத கிருத்திகையையொட்டி, திருத்தணி முருகன் கோயிலில் திரண்ட பக்தா்கள்.
சித்திரை மாத கிருத்திகையையொட்டி, மலைக் கோயிலில் திங்கள்கிழமை பக்தா்கள் குவிந்தனா்.
அறுபடை வீடுகளில் ஒன்றாகத் திகழும் திருத்தணி முருகன் மலைக் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வருவது வழக்கம்.
இந்த நிலையில், திங்கள்கிழமை சித்திரை கிருத்திகை விழாவையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதைத் தொடா்ந்து, மூலவருக்கு தங்கக் கீரிடம், தங்கவேல், வைர ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது.
சித்திரை மாத கிருத்திகை என்பதால் ஆயிரக்கணக்கான பக்தா்கள் காவடிகளுடன் வந்து மூலவரை தரிசித்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினா். மலைக் கோயிலில் திரளான பக்தா்கள் குவிந்ததால், பொது வழியில் 3 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனா்.
கிருத்திகை விழா ஏற்பாடுகளை முருகன் கோயில் இணை ஆணையா் பரஞ்ஜோதி, கோயில் அலுவலா்கள் செய்திருந்தனா்.