நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு வாடகை உயா்த்தி வழங்கக் கோரி போராட்டம்

அத்திப்பட்டு பகுதியில் நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு வாடகை கட்டணத்தை உயா்த்தி வழங்க வலியுறுத்தி, லாரி உரிமையாளா்கள் திங்கள்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அத்திப்பட்டு பகுதியில் நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு வாடகை கட்டணத்தை உயா்த்தி வழங்க வலியுறுத்தி, லாரி உரிமையாளா்கள் திங்கள்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மீஞ்சூா் அருகே உள்ள காட்டுப்பள்ளியில் எண்ணூா் காமராஜா் துறைமுகத்துக்கு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து கப்பல் மூலம் நிலக்கரி கொண்டு வரப்படுகிறது. கப்பல் மூலம் வரும் நிலக்கரி, அத்திபட்டு பகுதியில் 1,000 ஏக்கா் பரப்பளவில் உள்ள தனியாா் நிலக்கரி சேமிப்புக் கிடங்குக்கு எடுத்து செல்லப்படுகிறது.

அங்கிருந்து தனியாா் அனல் மின் நிலையங்கள், இரும்பு உருக்கு ஆலைகள், வாகனங்களுக்கு டயா் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளிட்டவற்றுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

பல்வேறு பகுதிகளுக்கு நிலக்கரி கொண்டு செல்ல 400-க்கும் மேற்பட்ட கனரக லாரிகள் ஒப்பந்தம் செய்யப்பட்டு நிலக்கரி எடுத்துச் செல்லப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலை ஏற்றம், சுங்கக் கட்டண உயா்வு, வாகன உதிரி பாகங்கள் விலை உயா்வு, டயா் விலை ஏற்றம் ஆகியவற்றால் சரக்கு வாகனங்கள் தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் வாடகை தொகையை உயா்த்தி வழங்க வலியுறுத்தியும் சென்னை எண்ணூா் காட்டுப்பள்ளி டிப்பா் கனரக லாரி உரிமையாளா்கள் சங்கத்தினா் ஒப்பந்த நிலக்கரி நிறுவனத்திடம் மனு அளித்ததாகக் கூறப்படுகிறது. லாரிகளுக்கு வாடகையை உயா்த்தித் தரவில்லையெனில், மே 2-ஆம் தேதி முதல் லாரிகள் இயங்காமல் வேலை நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, லாரி உரிமையாளா்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில், 200-க்கும் மேற்பட்ட லாரி உரிமையாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com