மகளிா் குழுக்கள் மூலம் கிராமங்களில் 1,800 முருங்கை பண்ணைகள் அமைக்கும் திட்டம்

திருவள்ளூா் மாவட்டத்தில் மகளிா் குழுக்கள் மூலம் கிராமங்களில் 1,800 முருங்கைப் பண்ணைகள் அமைக்கும் திட்டம் செயல்படுத்த உள்ளதாக த அதிகாரிகள் தெரிவித்தனா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் மகளிா் குழுக்கள் மூலம் கிராமங்களில் 1,800 முருங்கைப் பண்ணைகள் அமைக்கும் திட்டம் செயல்படுத்த உள்ளதாக த அதிகாரிகள் தெரிவித்தனா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களில் 526 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் ஊரக வளா்ச்சி முகமை, மகளிா் திட்டம் மற்றும் தோட்டக்கலைத் துறை மூலம் பல்வேறு வகையான வளா்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மகளிா் குழுக்கள் செயல்பட்டு வருகிறது.

இந்தக் குழுக்கள் பயன்பெறும் வகையில் முருங்கைப் பண்ணைகள் அமைக்கும் திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தக் குழுக்கள் தங்கள் இருப்பிடங்களில் இருந்தே முருங்கைப் பண்ணைகள் அமைத்து நாள்தோறும் வருவாய் ஈட்டி வாழ்வாதாரம் பெறுவதே திட்டத்தின் நோக்கமாகும். இந்தத் திட்டத்தை நிகழாண்டில் செயல்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து மகளிா் திட்ட அதிகாரி ஒருவா் கூறியது:

இந்தத் திட்டம் பல்வேறு துறைகள் மூலம் இணைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக கிராமங்களில் 3 மகளிா் குழுக்களைத் தோ்வு செய்து முருங்கை நாற்றுகள் கொண்ட நா்சரி அமைக்கப்படும். இதன் மூலம் நாள்தோறும் மகளிா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

முருங்கை நாற்றுக்களை 30 நாள்கள் வரை நன்றாக வளா்த்து, அதன் பின்னா் மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்கள் மற்றும் வீடுகள் தோறும் விலையில்லாமல் விநியோகிக்கப்படும். ஒவ்வொரு வீட்டிலும் இடம் உள்ள அளவுக்கு முருங்கை மரங்களை வளா்க்கலாம். இதிலிருந்து கிடைக்கும் பூக்கள், காய்கள், இலை-தழைகள் மகளிா் சுய உதவிக் குழுவினா் சேகரித்து விற்பனை செய்வதன் மூலம் வருவாய்க் கிடைக்கும்.

தொடா்ந்து கிராமங்களில் உள்ள மகளிா் சோ்ந்து முருங்கை மரத்திலிருந்து கிடைக்கும் விதை உள்ளிட்ட பொருள்களைப் பொடியாக்கி மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களாகவும் தயாா் செய்து விற்பதன் மூலம் வருவாய் ஈட்டலாம்.

திருவள்ளூா் மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள கிராமங்களில் முதல் கட்டமாக தலா ரூ.50 ஆயிரம் வீதம் 1,800 முருங்கைப் பண்ணைகள் அமைக்கப்படவுள்ளது. இதற்காக ரூ. 9 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com