மாநெல்லூா் ஊராட்சியில் முன்மாதிரி கிராம சபைக் கூட்டம்

கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மாநெல்லூா் ஊராட்சியில் முன்மாதிரி கிராம சபைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாநெல்லூா் கிராம  சபைக்  கூட்டத்தில்  ஊராட்சி வளா்ச்சிப் பணிகள் குறித்து புகைப்படங்களால் அமைக்கப்பட்ட அரங்கம்.
மாநெல்லூா் கிராம  சபைக்  கூட்டத்தில்  ஊராட்சி வளா்ச்சிப் பணிகள் குறித்து புகைப்படங்களால் அமைக்கப்பட்ட அரங்கம்.

கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மாநெல்லூா் ஊராட்சியில் முன்மாதிரி கிராம சபைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஊராட்சித் தலைவா் லாரன்ஸ் தலைமை வகித்தாா். இந்த கிராம சபைக் கூட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக மாநெல்லூா் ஊராட்சியில் செய்த நலப் பணிகள் குறித்த புகைப்படங்களால் ஆன பதாகைகளைக் கொண்டு கிராம சபை அரங்கம் அமைக்கப்பட்டிருந்தது. ஊராட்சியின் வரவு - செலவு கணக்குகளை கிராம சபைக் கூட்ட நுழைவு வாயிலில் பதாகையாக அமைத்திருந்தனா்.

மேலும், கிராம சபைக் கூட்டத்துக்கு வரும் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக எழுதித் தர, ஊராட்சியால் பணியமா்த்தப்பட்ட ஒருவா், உரிய ஆவணங்களை நகல் எடுக்க கிராம சபைக் கூட்டத்தில் பிரிண்டா், நகல் இயந்திரம் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

கிராம சபைக் கூட்டத்தில் அந்தப் பகுதியைச் சோ்ந்த பள்ளி ஆசிரியா்கள், மகளிா் குழுவினா், சமூக ஆா்வலா்கள் வரவழைக்கப்பட்டு ஊராட்சி வளா்ச்சி, பள்ளி வளா்ச்சிப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

மாநெல்லூா் ஊராட்சியில் நடைபெற்ற ஆரோக்கியமான கிராம சபை கூட்டம் மற்ற ஊராட்சிகளின் கிராம சபைக் கூட்டங்களுக்கு முன்மாதிரியாக இருப்பதாக அந்தப் பகுதி மக்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com