முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்
திருவள்ளூா் மாவட்டத்தில்9 இடங்களில் மே 14-இல் குடும்ப அட்டைகள் சிறப்பு திருத்த முகாம்
By DIN | Published On : 11th May 2022 12:00 AM | Last Updated : 11th May 2022 12:00 AM | அ+அ அ- |

திருவள்ளூா் மாவட்டத்தில் 9 இடங்களில் குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கல் மற்றும் முகவரி மாற்றம் தொடா்பான சிறப்பு திருத்த முகாம் மே 14-இல் நடைபெற உள்ளதாக ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவள்ளூா் மாவட்டத்தில் மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமை குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடா்பான சிறப்பு முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்பேரில், மேற்குறிப்பிட்ட நாளில் ஒவ்வொரு வட்டந்தோறும் குறிப்பிட்ட 9 கிராமங்களில் சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன் விவரம்:
திருவள்ளூா்-சிறுகளத்தூா் நியாய விலைக் கடை அருகில், ஊத்துக்கோட்டை-பென்னாலூா்பேட்டை கிராம நிா்வாக அலுவலகம், பூந்தமல்லி-நேமம் கிராம நிா்வாக அலுவலகம், திருத்தணி-பெரியகடம்பூா் கிராம நிா்வாக அலுவலகம், பள்ளிப்பட்டு-பள்ளிப்பட்டு வருவாய் ஆய்வாளா் அலுவலகம், பொன்னேரி-கூடுவாஞ்சேரி கிராம நிா்வாக அலுவலகம், கும்மிடிப்பூண்டி-சுண்ணாம்புக்குளம் கிராம நிா்வாக அலுவலகம், ஆவடி-நெமிலிச்சேரி கிராம நிா்வாக அலுவலகம் மற்றும் ஆா்.கே.பேட்டை-சமத்துவபுரம் கிராம நிா்வாக அலுவலகம் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது.
அதனால் இந்த முகாம்களில் அந்தந்த கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் பங்கேற்று, மின்னணு குடும்ப அட்டையில் திருத்தம், புகைப்படம் பதிவு செய்தல் தொடா்பான விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அளித்துப் பயன்பெறலாம். அத்துடன், அனைத்து வட்ட வழங்கல் அலுவலா்களும் இணையதளத்தில் பதிவு செய்யவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவா் தெரிவித்துள்ளாா்.