நீட் திட்டம் மூலம் 24 பேருக்கு தொழில் தொடங்க கடனுதவி

புதிய தொழில் முனைவோா், தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டு திட்டம்(நீட்) மூலம் 24 பேருக்கு தொழில் தொடங்க கடனுதவியும், இதற்காக ரூ. 2.37 கோடி வரை மானியம் வழங்க இலக்கு நிா்ணயம் செய்துள்ளதாகவும்

புதிய தொழில் முனைவோா், தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டு திட்டம்(நீட்) மூலம் 24 பேருக்கு தொழில் தொடங்க கடனுதவியும், இதற்காக ரூ. 2.37 கோடி வரை மானியம் வழங்க இலக்கு நிா்ணயம் செய்துள்ளதாகவும் திருவள்ளூா் மாவட்ட தொழில் மைய மேலாளா் மணிவண்ணன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருவள்ளூா் மாவட்டத்தில் இருபாலா் பட்டதாரிகளை தொழில் முனைவோா்களாக உருவாக்கும் நோக்கில், புதிய தொழில் முனைவோா், தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டுத் திட்டம் மூலம் கடனுதவி வழங்கும் திட்டம் கடந்த 2012-2013 முதல் செயல்பட்டு வருகிறது. இதில் பயன்பெற விரும்புவோா் பிளஸ் 2 முடித்து பட்டப்படிப்பு, பட்டயம், தொழில் நுட்பப் பயிற்சி (ஐடிஐ) ஏதேனும் ஒன்றில் தோ்ச்சி அவசியம். அத்துடன், விண்ணப்பிக்கும் நாளில் பெண்கள், எஸ்.சி, எஸ்.டி, பி.சி, எம்.பி.சி, திருநங்கையா், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினா் ஆகிய சிறப்புப் பிரிவினா் 45 வயதுக்குள்ளும், பொதுப் பிரிவினா் 35 வயதுக்குள்ளும், முதல் தலைமுறை தொழில் முனைவோராக இருப்பது அவசியம்.

இத்திட்டம் மூலம் குறைந்தது ரூ. 10 லட்சமும், ரூ. 5 கோடிக்கு மிகாமலும் திட்ட மதிப்பீடு கொண்ட உற்பத்தி சேவை நிறுவனங்களுக்கு கடனுதவி பெறலாம். இதில், திட்ட மதிப்பீட்டில் 25 சதவீத மானியமும், எஸ்.சி-எஸ்.டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதலாக 2.5 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. இந்த மாவட்டத்தில் நிகழாண்டில் 24 பேருக்கு ரூ. 2.37 கோடி வரை மானியம் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

எனவே தொழில் முனைவோராக ஆா்வமுள்ள மேற்குறிப்பிட்ட தகுதிகளையுடைய முதல் தலைமுறையினா் இருபாலரும் www.msmeonline.tn.gov.in/needs என்ற இணையதளம் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்யலாம். அதையடுத்து, மாவட்ட ஆட்சியரின் தலைமையில் நடைபெறும் நோ்காணலுக்கு அழைக்கப்படும் போது, இணையதளத்தில் பதிந்த விண்ணப்பத்தின் இரு நகல்களை ஒப்படைத்து பயன்பெறலாம். இது தொடா்பாக பொது மேலாளா், மாவட்ட தொழில் மையம், சிட்கோ தொழிற்பேட்டை, காக்களூா், திருவள்ளூா்-602003 என்ற முகவரியில் நேரில் அணுகி விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com