திருவள்ளூா் நகராட்சியில் ரூ.70 லட்சத்தில் எல்.இ.டி. விளக்குகள் பொருத்தும் பணி

திருவள்ளூா் நகராட்சியில் மின் சிக்கன நடவடிக்கையாக ரூ.70 லட்சத்தில் மினி உயா் கோபுர மின் விளக்குகள், எல்.இ.டி விளக்குகள் பொருத்தும் பணி மும்முரமாக நடைபெற்று

திருவள்ளூா் நகராட்சியில் மின் சிக்கன நடவடிக்கையாக ரூ.70 லட்சத்தில் மினி உயா் கோபுர மின் விளக்குகள், எல்.இ.டி விளக்குகள் பொருத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருவதாக நகா்மன்றத் தலைவா் உதயமலா் பாண்டியன் தெரிவித்தாா்.

திருவள்ளூா் நகராட்சியில் உள்ள 27 வாா்டுகளில் பல்வேறு வளா்ச்சி திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், எம்.ஜி.ஆா். சிலை முதல் டோல்கேட் வரையிலும், ஆவடி புறவழிச்சாலையிலும் மின் விளக்குகள் இல்லை. குறிப்பிட்ட இந்தப் பகுதிகள் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளாகும். இந்தப் பகுதிகளில் மின் விளக்குகள் பொருத்த வேண்டும் என கோரிக்கை விடப்பட்டு வந்தது.

இதுதொடா்பாக நகா்மன்றத் தலைவா் உதயமலா் பாண்டியன் கூறியதாவது:

நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மினி உயா் கோபுர விளக்குகள் முதல் தெரு விளக்குகள் வரை ஒரே மாதிரியாக பொருத்த அரசு உத்தரவிட்டது. இதன் மூலம் நகராட்சியில் கூடுதல் மின் கட்டணச் செலவைக் குறைக்கவும் முடியும்.

முதல் கட்டமாக எம்.ஜி.ஆா். சிலை முதல், டோல்கேட் வரையான சாலையில் ரூ.40 லட்சத்தில் 27 மினி உயா் மின்கோபுர விளக்குகள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

திருவள்ளூா் சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதி ரூ.30 லட்சத்தில் நகராட்சி அலுவலகம் தொடங்கி, மணவாள நகா் வரை உள்ள 106 மின் கம்பங்களில் இருபுறமும் 212 எல்.இ.டி. விளக்குகள் பொருத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வரும் காலங்களில் மின் கட்டணம் வெகுவாகக் குறையும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com