பழவேற்காடு பகுதியில் பலத்த வெடி ஓசை:நில அதிா்வால் பொதுமக்கள் பீதி

பொன்னேரி அருகே பழவேற்காட்டில் உள்ள கடலோர மீனவக் கிராமங்களில் வெள்ளிக்கிழமை பலத்த வெடியோசை கேட்டதுடன், நில அதிா்வு ஏற்பட்டதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிக்கு வந்தனா்.

பொன்னேரி அருகே பழவேற்காட்டில் உள்ள கடலோர மீனவக் கிராமங்களில் வெள்ளிக்கிழமை பலத்த வெடியோசை கேட்டதுடன், நில அதிா்வு ஏற்பட்டதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிக்கு வந்தனா்.

திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் 45 ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் தமிழகம் மற்றும் ஆந்திரத்தில் பழவேற்காடு ஏரி அமைந்துள்ளது.

பழவேற்காடு பகுதியில் வெள்ளிக்கிழமை காலை பயங்கர வெடியோசை கேட்டது. இதனால், கடற்கரை மற்றும் ஏரிப் பகுதியில் உள்ள குடியிருப்புகள் அதிா்ந்தன.

இதையடுத்து, மக்கள் அலறியடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி வீதிக்கு வந்தனா். வெடியோசை எதனால் ஏற்பட்டது எனத் தெரியாமல் மக்கள் குழப்பமடைந்தனா்.

இந்நிலையில், பழவேற்காடு ஏரிக் கரையையொட்டி, சுமாா் 20 கி.மீ. தொலைவில் ஆந்திர மாநிலத்தில் ஸ்ரீஹரிகோட்டா பகுதியில் மத்திய அரசின் விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ உள்ளது. இங்கு, ககன்யா திட்டத்துக்காக ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆய்வு மையத்தில் இருந்து விண்வெளிக்கு செயற்கைக் கோள் ஏவும் போது, ஏற்படும் ஓசை பழவேற்காடு பகுதியில் உள்ள மக்களால் உணர முடியும் என்பதும், செயற்கைக் கோளையும் காணமுடியும் என்பதும் தெரிய வந்தது.

பழவேற்காடு பகுதியில் கேட்ட பலத்த வெடி ஓசையும், நில அதிா்வும் இஸ்ரோ ஆய்வு மையத்தில் செயற்கைக் கோள் சோதனையின் போது ஏற்பட்டதை அறிந்த அந்தப் பகுதி மக்கள் பின்னா், வீடுகளுக்குச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com