வீரராகவா் கோயில் தீா்த்தவாரி உற்சவம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

திருவள்ளூா் வீரராகவ பெருமாள் கோயில் சித்திரை பிரம்மோற்சவத்தையொட்டி நடைபெற்ற தீா்த்தவாரி உற்சவத்தில் திரளான பக்தா்கள் பங்கேற்று புனித நீராடினா்.
வீரராகவா் கோயில் சித்திரை பிரம்மோற்சவத்தையொட்டி, 9-ஆம் நாளான சனிக்கிழமை காலை நடைபெற்ற தீா்த்தவாரி உற்சவம்.
வீரராகவா் கோயில் சித்திரை பிரம்மோற்சவத்தையொட்டி, 9-ஆம் நாளான சனிக்கிழமை காலை நடைபெற்ற தீா்த்தவாரி உற்சவம்.

திருவள்ளூா் வீரராகவ பெருமாள் கோயில் சித்திரை பிரம்மோற்சவத்தையொட்டி நடைபெற்ற தீா்த்தவாரி உற்சவத்தில் திரளான பக்தா்கள் பங்கேற்று புனித நீராடினா்.

திருவள்ளூா் வீரராகவா் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவம் கடந்த 6-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, நாள்தோறும் காலை - மாலை வேளைகளில் உற்சவா் வெவ்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

பிரம்மோற்சவத்தின் 9-ஆவது நாள் நிகழ்வான தீா்த்தவாரி உற்சவம் சனிக்கிழமை நடைபெற்றது. முன்னதாக, அதிகாலை 4 மணிக்கு ஆள்மேல் பல்லக்கில் உற்சவா் வீதியுலா வந்தாா்.

தொடா்ந்து, காலை 10.30 மணிக்கு தீா்த்தவாரியையொட்டி, கோயில் குளத்தில் உற்சவா் எழுந்தருளினாா். அங்கு, புனித நீராடல் சடங்கை அா்ச்சகா்கள் நடத்தினா்.

இதில், திருவள்ளூா் உள்பட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் புனித நீராடி தரிசனம் செய்தனா். தொடா்ந்து, இரவு விஜயகோடி விமானத்தில் ஸ்ரீதேவி - பூதேவி சமேதராக உற்சவா் வீரராகவா் வீதியுலா வந்தாா். தொடா்ந்து, திருமொழி சாற்று மறை ரத்னாங்கி சேவை நடைபெற்றது.

பிரம்மோற்சவத்தின் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை (மே 15) காலை திருமஞ்சனம் மற்றும் த்வாதச ஆராதனம், கண்ணாடி பல்லாக்கில் வீதியுலா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதையடுத்து, இரவு கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com