ஓராண்டு கால திமுக ஆட்சியில் ரூ.2,666 கோடி கோயில் சொத்துகள் மீட்பு: அமைச்சா் சேகா்பாபு

ஓராண்டு திமுக ஆட்சியில் ரூ.2,666 கோடி மதிப்புள்ள கோயில் சொத்துகள் மீட்கப்பட்டுள்ளதாக அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

ஓராண்டு திமுக ஆட்சியில் ரூ.2,666 கோடி மதிப்புள்ள கோயில் சொத்துகள் மீட்கப்பட்டுள்ளதாக அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் உள்ள மேலூா் திருவுடையம்மன், பழவேற்காடு ஆதிநாராயண பெருமாள், திருப்பாலைவனம் திருப்பாலீஸ்வரா் உள்ளிட்ட கோயில்களில் அமைச்சா் பி.கே.சேகா்பாபு சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

அப்போது, மேலூா் திருவுடையம்மன் கோயிலை முறையாக பராமரிக்க ஊழியா்களுக்கு உத்தரவிட்டாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியது:

தமிழ்நாட்டில் கடந்த ஓராண்டு காலத்தில் ரூ.2,666 கோடி மதிப்புள்ள கோயில் சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன. ஆனால், கடந்த 10 ஆண்டுக்கால அதிமுக ஆட்சியில் ரூ. 3,400 கோடி சொத்துகள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளன.

முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆட்சி அறநிலையத் துறைக்கு பொற்கால ஆட்சியாகும். நடப்பாண்டு ரூ. 1000 கோடி மதிப்பில் 1,500 கோயில்களில் புனரமைப்புப் பணிகள் நடைபெற உள்ளன. 1,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த 80 கோயில்கள் ரூ.100 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட உள்ளன.

சிறுவாபுரி முருகன் திருக்கோயிலின் கும்பாபிஷேக தேதி முடிவு செய்யப்பட்டு வெகு விரைவில் அறிவிக்கப்படும். அதே போன்று பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலுக்கு ரூ. 8 கோடி மதிப்பில் தங்கத்தோ் அமைப்புப் பணிகளும், ரூ.150 கோடியில் கோயில் திருப்பணிகளும் நடைபெற உள்ளன.

தவறுகளுக்கு இடம் தராமல் சிறப்பாக பணிகள் நடைபெற்று வரும் கோயில்களின் விவகாரத்தில் அறநிலையத் துறை தலையிடாது. சட்டவிதிகளை மீறி கோயில்களை தவறாக பயன்படுத்தினால் மட்டுமே அறநிலையத் துறை தலையிடும் என்றாா் அமைச்சா்.

இந்த ஆய்வின்போது எம்எல்ஏ-க்கள் பொன்னேரி துரை.சந்திரசேகா், கும்மிடிப்பூண்டி டி.ஜெ.கோவிந்தராஜன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com