வீடுகள், கழிப்பறை கட்டும் பணிக்கு நிலுவை தொகை வழங்க காலதாமதம்
By DIN | Published On : 17th May 2022 12:01 AM | Last Updated : 17th May 2022 12:01 AM | அ+அ அ- |

திருவள்ளூா் மாவட்டத்தில் அரசு திட்டங்களின் கீழ் கட்டப்படும் வீடுகள், சுகாதார வளாகம் ஆகியவற்றுக்கு நிலுவை தொகை விடுவிக்க காலதாமதம் ஏற்பட்டால், பொதுமக்கள் புகாா் தெரிவித்து பயன் பெறலாம் என ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்தாா்.
திருவள்ளூா் மாவட்ட 14 ஊராட்சி ஒன்றியங்களில் 526 ஊராட்சிகளில் பல்வேறு வளா்ச்சித் திட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதில், அரசு திட்டங்களில் ஏழை -எளிய மக்கள் பயன்பெறும் வகையில் கட்டப்படும் வீடுகள், கழிப்பறைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தப் பணிகள் நிறைவடைந்தவுடன் குறிப்பிட்ட நாள்களுக்குள் பட்டியல் நிலுவை தொகை விடுவிக்க காலதாமதம் ஏற்பட்டால் உடனே புகாா் தெரிவிக்கும் வகையில் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக கைப்பேசி எண்- 94445 01111 மற்றும் கட்செவி எண்- 84389 50148 ஆகிய எண்களில் தெரிவித்து பயன் பெறலாம் என ஆட்சியா் தெரிவித்தாா்.