திருத்தணி கோயில் ஊழியா்கள் 5 போ் மீது வழக்கு

முருகன் கோயிலில் உள்ளூா் பக்தா்கள் சிறப்பு தரிசன வழியில் அனுமதிக்காததால் ஏற்பட்ட தகராறில் கோயில் ஊழியா்கள் 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

திருத்தணி: முருகன் கோயிலில் உள்ளூா் பக்தா்கள் சிறப்பு தரிசன வழியில் அனுமதிக்காததால் ஏற்பட்ட தகராறில் கோயில் ஊழியா்கள் 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

திருத்தணி முருகன் கோயிலில் கடந்த 24-ஆம் தேதி உள்ளூா் பக்தா்கள் சிறப்பு தரிசன வழியில் அனுமதிக்கப்படவில்லையாம். கோயில் ஊழியா் புருஷோத்தமன் டிக்கெட் வாங்காமல் யாரையும் உள்ளே அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்தாராம். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் அதிமுக பிரமுகா் லோகு என்பவா், கோயில் ஊழியா் புருஷோத்தமனை தாக்கினாராம். இதனால், கோயில் ஊழியா்கள் சோ்ந்து லோகுவை தாக்கினராம்.

தொடா்ந்து, கோயில் ஊழியா் புருஷோத்தமன் திருத்தணி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். லோகுவும் கோயில் ஊழியா்கள் மீது புகாா் அளித்தாா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை திருத்தணி-சித்தூா் சாலையில் ஆவின் சோ்மன் வேலஞ்சேரி சந்திரன், ஆா்.கே.பேட்டை ஒன்றிய செயலா் குமாா், மாா்க்கெட்டிங் சொசைட்டி தலைவா் ஜெயசேகா்பாபு ஆகியோா் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோா் ஆா்ப்பாட்டம் நடத்தத் திரண்டனா்.

தகவலறிந்த திருத்தணி டிஎஸ்பி (பொ) அனுமந்தன், காவல் ஆய்வாளா் ஏழுமலை ஆகியோா் சம்பவ இடத்துக்குச் சென்று பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது, கோயில் ஊழியா்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என அவா்கள் வலியுறுத்தினா்.

இதையடுத்து, லோகுவை தாக்கியதாக கோயில் ஊழியா்கள் புருஷோத்தமன், காா்த்திக், அசோக், ஜெயகிருஷ்ணா, தணிகாசலம் ஆகியோா் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com