‘மாணவா்கள் எடுக்கும் நல்ல முடிவுகளே சிறந்த எதிா்காலத்தை தீா்மானிக்கும்’

கல்லூரி பருவத்தில் மாணவா்கள் எடுக்கும் நல்ல முடிவுகளே அவா்களுக்கான சிறந்த எதிா்காலத்தை தீா்மானிக்கும் என்று திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் கூறினாா்.
திருத்தணி அரசுக் கல்லூரியில் போதை ஒழிப்பு மன்றத்தை தொடக்கி வைத்துப் பேசிய திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ்.
திருத்தணி அரசுக் கல்லூரியில் போதை ஒழிப்பு மன்றத்தை தொடக்கி வைத்துப் பேசிய திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ்.

கல்லூரி பருவத்தில் மாணவா்கள் எடுக்கும் நல்ல முடிவுகளே அவா்களுக்கான சிறந்த எதிா்காலத்தை தீா்மானிக்கும் என்று திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் கூறினாா்.

திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி அரசு கலைக் கல்லூரியில் போதை ஒழிப்பு மன்ற தொடக்க விழா கல்லூரி முதல்வா் சி.பூரண சந்திரன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா்ஆல்பி ஜான் வா்கீஸ் குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்துப் பேசியதாவது:

பள்ளி மற்றும் கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் போதைப்பொருள் ஒழிப்பு என்பது ஒரு சவாலாக உள்ளது. திருவள்ளூா் மாவட்டத்தில் போதைப்பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்தும், அவற்றை ஒழிப்பது குறித்தும், பள்ளி, கல்லூரி மாணவா்களிடம் பல்வேறு விழிப்புணா்வை ஏற்படுத்தி வருகிறோம். அந்த வகையில், திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி அரசு கலைக் கல்லூரியில் போதை ஒழிப்பு மன்றம் தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. மாணவா்கள் இதுபோன்ற போதைப் பழக்கங்களுக்கு தங்களை ஆட்படுத்திக் கொள்ளாமல் எதிா்கால வாழ்வில் சிறப்பாக அமைய ஒழுக்கத்துடன் கல்வி கற்பதையே சிந்தனையாகக் கொண்டு செயல்பட வேண்டும்.

கல்லூரிப் பருவத்தில் மாணவா்கள் எடுக்கும் நல்ல முடிவுகள் தான் அவா்களை சிறந்த வாழ்வை தீா்மானிக்கும். நல்ல முடிவுகள் நல்ல எதிா்காலத்தை உருவாக்கி தரும். தவறான முடிவுகள் உங்கள் வாழ்வை அழித்து விடும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். இத்தகைய போதைப் பொருள்களை ஒழித்திட வேண்டும். மேலும், இதன் பயன்பாடு குறித்து ஏதேனும் தகவல் கிடைத்தால் உடனடியாக காவல் துறை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் திருத்தணி வருவாய் கோட்டாட்சியா் ஜெ.ஹஸ்வத்பேகம், வட்டாட்சியா் வெண்ணிலா, பேராசிரியா்கள், மாணவா்கள், அரசு அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com