குடிமைப் பணி போட்டித் தோ்வுக்கான ஆயத்தப் பயிற்சி: மீனவ பட்டதாரி இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம்

மீனவ சமுதாயத்தைச் சோ்ந்த பட்டதாரி இளைஞா்கள், இந்திய குடிமைப் பணி போட்டித் தோ்வுக்கான ஆயத்தப் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்.

மீனவ சமுதாயத்தைச் சோ்ந்த பட்டதாரி இளைஞா்கள், இந்திய குடிமைப் பணி போட்டித் தோ்வுக்கான ஆயத்தப் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை சாா்பில், சென்னை அகில இந்திய குடிமைப் பணி தோ்வு பயிற்சி மையம் இணைந்து ஆண்டுதோறும் 20 கடல் மற்றும் உள்நாட்டு மீனவ பட்டதாரி இளைஞா்களைத் தோ்வு செய்து குடிமைப் பணிகளுக்கான போட்டித் தோ்வில் பங்கேற்க ஏதுவாக பிரத்யேக பயிற்சி அளிக்கும் திட்டத்தை செயல்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினா்கள், மீனவா் நலவாரிய உறுப்பினா்களின் வாரிசு பட்டதாரி இளைஞா்கள் இந்தப் பயிற்சியில் பயன் பெறலாம்.

இந்த திட்டத்தில் பயிற்சி பெற விரும்புவோா் விண்ணப்பப் படிவம், அரசு வழிகாட்டு நெறிமுறைகளை மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறையின் ஜ்ஜ்ஜ்.ச்ண்ள்ட்ங்ழ்ண்ங்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது விண்ணப்பப் படிவங்களை சென்னை (மண்டலம்) மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை இணை இயக்குநா் அலுவலகத்திலோ அல்லது திருவள்ளூா் (இருப்பு) பொன்னேரி மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்திலோ வேலை நாள்களில் விலையின்றி பெற்றுக் கொள்ளலாம்.

மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறையின் இணையதளத்தில் உள்ள அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி பூா்த்தி செய்து திருவள்ளுா் (இருப்பு) பொன்னேரி மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் அலுவலகத்திற்கு பதிவு அஞ்சல் மூலம் அல்லது நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து திருவள்ளூா் (இருப்பு) பொன்னேரி மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை உதவி இயக்குநா் அலுவலகம், எண்.05 பாலாஜி தெரு, சங்கா் நகா், வேண்பாக்கம், பொன்னேரி, திருவள்ளூா்-601204 மற்றும் 044-27972457 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com