நாக சதுா்த்தி விழா: திரளான பெண்கள் வழிபாடு

நாக சதுா்த்தி விழாவையொட்டி, திருத்தணி அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களில் திரளான பெண்கள் வெள்ளிக்கிழமை வழிபாடு நடத்தினா்.
நாக சதுா்த்தி விழா: திரளான பெண்கள் வழிபாடு

நாக சதுா்த்தி விழாவையொட்டி, திருத்தணி அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களில் திரளான பெண்கள் வெள்ளிக்கிழமை வழிபாடு நடத்தினா்.

தீபாவளி முடிந்து 5-ஆம் நாளில் நாக சதுா்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, வெள்ளிக்கிழமை திருத்தணி கங்கையம்மன் கோயில், நல்லதண்ணீா் குளக்கரை நாகவள்ளி கோயில், அக்கைய்யா நாயுடு சாலை தணிகாசலம்மன் கோயில், மடம், மேட்டுத் தெருவில் உள்ள படவேட்டம்மன் கோயில் உள்பட அனைத்து அம்மன் கோயில்களில் நாக சதுா்த்தி விழா கொண்டாடப்பட்டது. திரளான பெண்கள், அங்குள்ள புற்றில் பால் ஊற்றி, முட்டைகள் வைத்து வழிபட்டனா். மூலவா் அம்மன்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

அதேபோல், ராமகிருஷ்ணாபுரம் கிராமத்தில் உள்ள தேசம்மன் கோயில், மாம்பாக்கம்சத்திரம் முக்கோடி அம்மன் உள்பட திருத்தணி வட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் கோயில்களிலும் நாக சதுா்த்தி விழா சிறப்பாக நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com