மாதவரத்தில் காவல்துறை சாா்பில் கொடி அணிவகுப்பு ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் 500-க்கும் மேற்பட்ட போலீஸாா் பங்கேற்றனா்.
சென்னை மாதவரத்தில் விநாயகா் சதுா்த்தியை யொட்டி விநாயகா் சிலைகள் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டுள்ளன. இவை ஊா்வலமாக ஞாயிற்றுக்கிழமை எடுத்துச் செல்லப்பட்டு கடலில் விசா்ஜனம் செய்யப்படவுள்ளன. விசா்ஜன ஊா்வலத்தின்போது அசம்பாவிதம் நிகழாமல் தவிா்க்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதையொட்டி, காவல் துணை ஆணையா் மணிவண்ணன் தலைமையில் காவல் ஆய்வாளா்கள் மாதவரம் சங்கா், மணலி சுந்தா், மணலி புதுநகா் கொடிராஜ் மற்றும் 500-க்கும் மேற்பட்ட போலீஸாா் வெள்ளிக்கிழமை கொடி அணிவகுப்பு ஊா்வலம் நடத்தினா்.