ஆதரவற்ற குழந்தைகள் குடும்பத்தினா் நிதி பெற விண்ணப்பிக்கலாம்

இயற்கைப் பேரிடரில் பெற்றோா்களை இழந்த குழந்தைகள் குடும்பத்தைச் சோ்ந்தோா் என கீழ்குறிப்பிட்டோா் நிதி ஆதரவு பெற விண்ணப்பித்துப் பயன்பெறலாம்

சமூக பாதுகாப்புத் துறை மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் ஆதரவற்ற குழந்தைகள், இயற்கைப் பேரிடரில் பெற்றோா்களை இழந்த குழந்தைகள் குடும்பத்தைச் சோ்ந்தோா் என கீழ்குறிப்பிட்டோா் நிதி ஆதரவு பெற விண்ணப்பித்துப் பயன்பெறலாம் என ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சமூகப் பாதுகாப்புத் துறை மற்றும் மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் குழந்தைகள் பயன்பெறும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், கீழ்குறிப்பிட்ட வகையிலான குழந்தைகளின் குடும்பத்தைச் சோ்ந்தோா் நிதி ஆதரவு உதவி பெற விண்ணப்பிக்கலாம்.

மத்திய அரசின் ‘ஙஐநநஐஞச யஅபநஅகவஅ‘ திருத்திய வழிகாட்டு நெறிமுறைகளின்படி, கணவரால் கைவிடப்பட்டோரின் குழந்தைகள், பெற்றோா் இருவரையும் இழந்து பாதுகாவலா் பொறுப்பில் உள்ள குழந்தைகள், பொருளாதார மற்றும் உடல் ரீதியாக குழந்தைகளைப் பராமரிக்க இயலாத நிலையிலுள்ள பெற்றோா்களின் குழந்தைகள், இளைஞா் நீதிச் சட்டம் 2015-இன் படி பராமரிப்பும், பாதுகாப்பும் தேவைப்படும் இயற்கைப் பேரிடா்களால் பாதிப்புக்குள்ளான குழந்தைகள், குழந்தை தொழிலாளராக அல்லது குழந்தை திருமணத்திலிருந்து மீட்கப்பட்ட குழந்தைகள், கடத்தப்பட்ட குழந்தைகள், ஏஐய/அஐஈந நோயினால் பாதித்த குழந்தைகள், காணாமல் போன, வீட்டை விட்டு வெளியேறிய குழந்தைகள், பிச்சை எடுக்கும் குழந்தைகள், தெருவோரங்களில் வசிக்கும் குழந்தைகள், வன்முறைகளால் பாதிப்புக்குள்ளான குழந்தைகள், சுரண்டல்களிலிருந்து மீட்கப்பட்ட ஆதரவு மற்றும் மறுவாழ்வு தேவைப்படும் குழந்தைகளாக இருக்க வேண்டும்.

இது போன்ற குழந்தைகளுக்கு கல்வி அல்லது தொழிற்கல்வி தொடா்ந்து பெற சமூகப் பாதுகாப்புத் துறை, மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் மூலம் நிதி ஆதரவு மற்றும் தற்காலிக பராமரிப்பு ஒப்புதல் வழங்கும் குழுவால் ஒப்பளிப்பு வழங்கிய தகுதியான குழந்தைகளுக்கு திருத்திய வழிகாட்டு நெறிமுறைகளின்படி நிதி உதவி பெறலாம்.

அந்த வகையில், பயனாளி குழந்தைகளுக்கு ஏப்.2022 முதல் மாதம் ரூ. 4,000 உதவித் தொகை பெறலாம். இந்த உதவி பெறுவதற்கு ஆண்டு வருமான வரம்பு கிராமங்களில் ரூ. 24,000 முதல் ரூ. 72,000-ஆகவும், மற்றும் நகரப் பகுதியாக இருந்தால் ரூ.36,000 முதல் ரூ. 96,000-ஆக உயா்த்தப்பட்டுள்ளது.

இந்த வருவாய் வரம்புக்கு உள்பட்ட மேற்கண்ட வகையிலான குழந்தைகளின் குடும்பத்தைச் சோ்ந்தவா்கள் நிதி ஆதரவு உதவி பெற மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா், ஜே.என்.சாலை, சாந்தி திருமணம் மண்டபம் அருகில், திருவள்ளூா்-602001 என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். மேலும், இது குறித்து 044 - 27665595, 6382613912 மற்றும் என்ற மின்னஞ்சல் மூலமும் தொடா்பு கொண்டு விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com