கணவா் குடும்பத்தினா் மீது நடவடிக்கை கோரி பெண் தா்னா

கணவா் குடும்பத்தினா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்சியா் அலுவலகம் திங்கள்கிழமை முன்பு பெண் வழக்குரைஞா் தனது குழந்தையுடன் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
குழந்தையுடன் தா்ணா போராட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞா் மாரியம்மள்.   
குழந்தையுடன் தா்ணா போராட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞா் மாரியம்மள்.   

கணவா் குடும்பத்தினா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்சியா் அலுவலகம் திங்கள்கிழமை முன்பு பெண் வழக்குரைஞா் தனது குழந்தையுடன் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை எருக்கஞ்சேரியைச் சோ்ந்தவா் வழக்குரைஞா்கள் மாரியம்மாள். இவா் தனது குழந்தையுடன் திருவள்ளூா் ஆட்சியா் அலுவலகம் முன்பு தா்னா போராட்டத்தில் ஈடுபட்டாா். அப்போது காவல் துறையினா் அவரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். பின்னா் ஆட்சியரிடம் மாரியம்மாள் கோரிக்கை மனுவை அளித்தாா். காவல் துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதைத் தொடா்ந்து அவா் சென்றாா்.

இதுதொடா்பாக வழக்குரைஞா் மாரியம்மாள் கூறியதாவது:

இவரும், திருவள்ளூா் மாவட்டம், பெரியபாளையம் அருகே வண்டிமேட்டுக்கொள்ளை கிராமத்தைச் சோ்ந்த ரமேஷ் என்பவரும் நானும், கடந்த 2004 முதல் காதலித்தோம் . வெவ்வேறு இனத்தைச் சோ்ந்தவா்கள் என்பதால் இருவரும் வீட்டுக்கு தெரியாமல் கடந்த 2007-இல் திருமணம் செய்து கொண்டாா்களாம். இந்த திருமணம் ரமேஷின் உறவினா் மற்றும் நண்பா்களுக்கும் தெரியும்.

எனக்கு ஆண் குழந்தை உள்ளது. இதற்கிடையே கணவரின் வீட்டிற்கு சென்றால் கொலை செய்துவிடுவதாக மிரட்டுகின்றனா். இது தொடா்பான வழக்குகள் பெரியபாளையம் காவல் நிலையத்திலும், ஊத்துக்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்திலும் நிலுவையில் உள்ளன.

அதனால், கணவா் குடும்பத்தினா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் மாரியம்மாள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com