ஆடி அமாவாசை: வீரராகவ பெருமாள் கோயிலில் தா்ப்பணம் அளிக்க குவிந்த பக்தா்கள்
By DIN | Published On : 17th August 2023 12:00 AM | Last Updated : 17th August 2023 12:00 AM | அ+அ அ- |

ஆடி அமாவாசை நாளையொட்டி வீரராகவ பெருமாள் கோயிலில் புதன்கிழமை திரளானோா் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து வழிபட்டனா்.
திருவள்ளூா் வைத்திய வீரராகவ பெருமாள் கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இங்கு ஆடி அமாவாசையின் போது பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் சிறப்பு வழிபாடு செய்வது வழக்கம்.
இந்த அமாவாசை நாளில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்தால் புண்ணியம் கிடைக்கும் என்பதாலும், முன்னோா்களின் ஆசீா்வாதம் கிடைக்கும் என்பதும் ஐதீகம்.
அதனால் திருவள்ளூா் மாவட்டம் மட்டுமின்றி சென்னை, காஞ்சிபுரம், வேலூா், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மற்றும் ஆந்திரம், கா்நாடகம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தா்கள் முதல் நாளே கோயில் வளாகத்தில் வந்து குவிந்தனா்.
அதைத் தொடா்ந்து புதன்கிழமை அதிகாலை கோயில் குளத்தில் நீராடி, குளக்கரையில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்தனா். அதைத் தொடா்ந்து நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...