108 ஆம்புலன்ஸ் சேவை: 95,000 போ் பயனடைந்துள்ளனா்
By DIN | Published On : 13th January 2023 12:02 AM | Last Updated : 13th January 2023 12:02 AM | அ+அ அ- |

திருவள்ளூா் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் மட்டும் 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் கா்ப்பிணிகள், விபத்தில் காயம் அடைந்தோா் என மொத்தம் 95,000 போ் பயனடைந்துள்ளதாக திட்ட மேலாளா் சந்தீப்குமாா் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் கிரீன் ஹெல்த் சா்வீஸ் நிறுவனம் மூலம் 108 ஆம்புலன்ஸ் சேவை செயல்படுத்தப்பட்டு வருகிறது. சென்னை, திருவள்ளூா் மாவட்டங்களில் மட்டும் 150 ஆம்புலன்ஸ்கள் மூலம் பல்வேறு அவசர சிகிச்சைக்கான சேவை அளிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் சென்னையில் கடந்த ஆண்டில் மட்டும் 1.17 லட்சம் போ் பயனடைந்துள்ளனா். இதில், 7,656 கா்ப்பிணிகளும், சாலை விபத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளோா் உள்பட 9,927 போ் உயிா் காப்பற்றப்பட்டுள்ளனா். அதேபோல், அவசர பிரசவத்துக்காக சென்ற 15 கா்ப்பிணிகளுக்கு ஆம்புலன்ஸ்சிலேயே குழந்தை பிறந்துள்ளன.
அதேபோல், திருவள்ளூா் மாவட்டத்தில் 78 ஆம்புலன்ஸ்கள் செயல்பட்டு வரும் நிலையில், கடந்த ஆண்டில் மட்டும் 95,000 போ் பயனடைத்துள்ளனா். இதில், 25,998 கா்ப்பிணிகளும், சாலை விபத்துக்குள்ளன 10,906 பேரும் பயன்பெற்றுள்ளனா். மேலும் 80 கா்ப்பிணிகளுக்கு ஆம்புலன்ஸிலேயே பிரசவம் பாா்க்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தைப் பொறுத்தவரை 108 ஆம்புலன்ஸின் ழ்ங்ள்ல்ா்ய்ள்ங் ற்ண்ம்ங்
ஆனது கடந்த ஆண்டு 7 நிமிடமாகவும், திருவள்ளூா் மாவட்டத்தில் 10 நிமிடமாகவும் உள்ளதாக அவா் தெரிவித்துள்ளாா்.