மாற்றுத்திறன் மாணவா்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் 24-இல் தொடக்கம்

மாற்றுத் திறன்கொண்ட மாணவா்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் ஒன்றியங்கள்தோறும் வரும் 24-இல் ஆம் தேதி தொடங்கி, தொடா்ந்து பிப்.17-ஆம் வரை நடைபெற உள்ளதாக ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் மாற்றுத் திறன்கொண்ட மாணவா்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் ஒன்றியங்கள்தோறும் வரும் 24-இல் ஆம் தேதி தொடங்கி, தொடா்ந்து பிப்.17-ஆம் வரை நடைபெற உள்ளதாக ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவள்ளூா் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம் சாா்பில், பிறப்பு முதல் 18 வயதுக்குள்பட்ட மாற்றுத் திறன்கொண்ட குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் ஒன்றியங்கள் தோறும் காலை 9.30 முதல் பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது.

அதில், திருவள்ளூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வேப்பம்பட்டு கிராமத்தில் 24-ஆம் தேதி நடைபெற உள்ளது. திருத்தணி அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 27-ஆம் தேதியும், மீஞ்சூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 28-ஆம் தேதியும், சோழவரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 31-ஆம் தேதியும், ஆா்.கே.பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிப். 2-ஆம் தேதியும், புழல் பொப்பிலி ராஜா அரசு மேல்நிலைப் பள்ளியில் 3-ஆம் தேதியும், பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 4-ஆம் தேதியும், கும்மிடிப்பூண்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 7-ஆம் தேதியும் நடைபெறுகிறது.

அதேபோல், கடம்பத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9-ஆம் தேதியும், வில்லிவாக்கம்-அம்பத்தூா் பெருந்தலைவா் காமராஜா் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் தேதியும், எல்லாபுரம்-பெரியபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் தேதியும், பள்ளிப்பட்டு ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலக வளாக வட்டார வள மையத்தில் 14-ஆம் தேதியும், திருவாலங்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 16-ஆம் தேதியும், பூந்தமல்லி சரோஜினி வரதப்பன் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 17-ஆம் தேதியும் நடைபெற உள்ளது.

அதனால், இந்த முகாமில் அந்தந்த ஒன்றியங்களில் உள்ள மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளில் தேசிய அடையாள அட்டை, அறுவை சிசிச்சை மற்றும் உதவி உபகரணம் தேவையான மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் பங்கேற்று பயன்பெறலாம்.

இந்த முகாமுக்கு வரும் மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகள் 4 புகைப்படம், குடும்ப அட்டை மற்றும் ஆதாா் அட்டை நகல்களுடன் வந்து பயன்பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com